பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் தருகின்றேன்
1000 கோடிக்கு திட்டம்



திட்டக் குழுவில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும் பொருட்டு அனைத்து கட்சிகளுக்கும் ஆளும் கட்சியினர் அன்பழைப்பு விடுத்திருப்பதானது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அன்பழைப்புக்குப் பின்னால் பொதிந்து கிடக்கும் நோக்கம் உள்ளபடியே பாராட்டப்பட வேண்டியதாகும். எந்தக் கட்சியினராக இருந்தாலும் அந்த நோக்கத்தினைப் புறக்கணிக்க முடியாது.

இன்றைய அரசியல் அமைப்பில் திட்டம் என்பதானது பெருமளவுக்கானதோர் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. திட்டத்தின் அளவு பெரிதாக பெரிதாக, நம்முடைய நம்பிக்கைகள் வளர்ந்து கொண்டே போவதானது இயற்கையானதாகும். எனவே திட்டத்தினைத் தொடர்ந்து மதிப்பிட்டுப் பார்க்க வேண்டியது இன்றியமையாததாகிறது. கூடுமான வரையில் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்திக் கொள்ள வேண்டும். பல்வேறுபட்ட நிலையிலும், புதிய உருவம் தரக்கூடிய மாதிரியாகவும், கூடுதலான ஏற்பாடுகள் செய்யக்கூடிய முறையிலும், திருத்தி அமைக்கக்கூடிய வகையிலும் நகல் திட்டத்தின் அமைப்பு இருக்க வேண்டும்.

இத்துறையில், ஆளும் கட்சியினருடன் ஒத்துழைப்பு என்பதானது திட்டங்களை உருவாக்கவும், அதனை நிறைவேற்றவும் சுறு சுறுப்பான முறையிலும், அனுதாபத்துடனும் இருக்கும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதற்கண் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே என்னுடைய கட்சி மனப்பூர்வமான ஒத்துழைப்பினை அளிக்க முன்வருகிறது.

பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் அடிப்படைக் கொள்கைகளில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பதை இத்தருணத்தல் நாம் நினைவில் கொள்ளவேண்-