பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

டும். என்றாலும், குறிப்பிடத்தக்க அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் நாங்கள் அரசியல் கட்சியினரால் உருவாக்கப்பட்டிருக்கும் திட்டத்தின் வரையளவுக்குட்பட்ட விதத்தில் தான் எங்களுடைய ஆலோசனைகளை எடுத்துக்கூறுவதாக இருக்கமுடியும்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், ஆளும் கட்சியினரால் கையாளப்பட்டு வரும் பொருளாதாரக் கொள்கையானது ஒரு கலப்படமான பொருளாதாரத் திட்டம் என்று தான் கூறவேண்டும். மேலும் இத்திட்டத்தின் அடிப்படையாக அமைந்துள்ள அரசியல்-பொருளாதாரத் தத்துவத்தைக் கூறுவதென்றால் "சோஷலிச மாதிரி" என்று தான் சொல்ல வேண்டும். தி. மு. கழகம் குழப்பமற்ற, ஒரு திட்ட வட்டமான தத்துவார்த்தத்தையே விரும்புகிறது.

அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளைத் திருத்தியமைக்கவோ, கலந்துரையாடவோ திட்ட குழுவின் அமைப்பு முறையில் வாழி வகைகள் இல்லாத நிலையில் தான் இருக்கிறது.

நாங்கள் செய்யக்கூடிய தெல்லாம் அதிகமான அளவில் நன்மைகளைப் பெறவும், சுமுகமான முறையில் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கான முறையிலும் உதவியாகத்தான் இருக்கமுடியும். ஆனால் திட்டக்குழுவின் நிர்வாக இயந்திரம் முற்றிலும் ஆளுங் கட்சியினரால் உருவாக்கப்பட்டதேயாகும்.

எனவே தி. மு. கழகத்தினர் வழங்க இருக்கும் ஆலோசனைகள், குறிப்பிடும் குறைபாடுகள் அல்லது ஏனைய கட்சியினரால் வழங்கப்படும் ஆலோசனைகள் அனைத்தும் ஆளும் கட்சியினர் கடைப்பிடித்து வரும் கலப்படமான பொருளாதாரத் திட்டத்தால் அதனுடைய உண்மையான தத்துவார்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலை இயற்கையாகவே அமைந்து கிடக்கிறது. மக்களின் எதிர்காலம், அவர்களின் முன்னேற்றம் ஆகியவைகளை உருவாக்க திட்டம் இன்றியமையாத ஒரு