பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

தேவை என்ற ஒரு உணர்வுதான் பொதுவான ஒரு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

மாநிலத்தின் திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டம் அற்ற முறையில் அணைத்தும் இருக்கிறது என்பதனை திட்டம் ஒன்றினை உருவாக்க முயற்சிப்பவர்கள் உணரத்தவறிவிட்டனர் என்ற கருத்தினை மறந்துவிடுவதற்கில்லை. அதனால் கிடைக்கக் கூடிய ஒரு சில பலனும் மத்திய அமைச்சரவையினரால் உருவாக்கப்பட்டுள்ள திட்டக்குழுவின் மூலமாகத்தான் பெறமுடிகிறது.

மரநிலத்தின் முயற்சி ஓரளவிற்கு உண்டு என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும் பெரிய அளவிற்கான திட்டங்கள் தீட்டும் அதிகாரம் அனைத்தும் மத்திய ஆட்சியாளரிடத்தில்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட திட்டங்களை ஏற்று நிறைவேற்றுவதற்கு மத்திய சர்க்காரைத் தூண்டுவதற்கு மாநில ஆட்சியினருக்கு வசதியாக இருக்கிறது.

எனவே, மாநிலத் திட்டங்களானது, அதன் போக்கிலேயே முக்கியத்துவம் பெற்றதோர் நிர்வாக அமைப்பினைக் கொண்டதாகவே இருக்கிறது.

நிறைவேற்றப்பட்ட இரண்டு திட்டங்களிலும் பெரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஆளுங்கட்சி மூன்றாவது திட்டத்தையும் நிறைவேற்றக்கூடிய பேராற்றல் தமக்குருப்பதாக நம்பிக்கொண்டிருப்பது இயற்கையின்பாற்பட்டதாகும். மேலும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட பலன்கள் அனைத்தும் அனைவராலும் விரும்பி ஏற்றுக் கொள்க்கூடிய முறையில் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இரண்டு திட்டங்களும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்ற பேருண்மையை ஏனைய அரசியல் கட்சிகள் மறந்துவிடக்கூடாது. மறந்துவிடுவதற்கும் இல்லை. குறை பாடுகளை நாம் உணரும்போது, நம்முடைய முயற்சிகளை சரிப்படுத்திக்கொள்ள மேலே கூறிய உண்மைகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஆளுங்-