பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கட்சியினரை வற்புறுத்தவேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.

மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் தேசீய வருமானத்தை உயர்த்துவதே முடியுந்தருவாயில் உள்ள இரண்டாவது திட்டத்தின் முதலாவதான தலையாய அடிப்படை நோக்கம் என்று கூறப்பட்டது.

இந்த நோக்கம் தவறுடையது என்று யாரும் கூறுவருவதற்கில்லை. ஆனால் புதியதோர் திட்டத்தை செயல் படுத்த முற்படும்போது, நடைமுறையில் ஏற்கெனவே உருவான உறுப்படியான பலனை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். வாழ்க்கைத் தரத்தில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோமா?

தேசீய வருமானம், தனி நபர் வருவாய் ஆகியவை உயர்ந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகப்பட்டுவிட்டதினால், தனிநபர் வருமானத்தின் மூலம் ஏற்பட்ட பலன் முற்றிலும் பயனற்றுப்போய்விட்டது.

இந்தப்பேருண்மையைக் கருத்தில் கொண்டு, மூன்றாவது திட்டத்தை உருவாக்கும் தருணத்திலும், அதனூடைய நடைமுறைக்காலத்திலும், விலைவாசி உயர்வுகளைக் கட்டுப்படுத்தி மக்கள் வாழ்க்கைத்தரத்தைச்சீர்செய்யக் கூடிய வகையில் இணைந்திருக்கவேண்டும்.

பணவீக்கம், பற்றாக்குறை நிதி நிலை ஆகிய இரண்டும் ஆபத்தான கட்டங்கள் என்று பொருளாதார மேதைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அந்நியச் செலாவணிப் பிரச்சினை மிகவும் தொல்லைகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இவைகளைக் கட்டுப்படுத்தவோ, திருத்தியமைக்கவோ நம்முடைய வறையளவுக்கு அப்பாற்பட்ட மத்திய அரசின் கடமை.

அவ்வப்போது ஏற்படக்கூடிய அதிர்ச்சிகள், நன்மை, தீமை ஆகியவைகளை மட்டும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படலாம்.