பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

எனவேதான், மாநிலத் திட்டத்திற்கான அளவினங்கள், அமைப்பு முறைகள் இன்னபிற அனைத்தும் உருவாக்கக்கூடிய அடிப்படை அதிகாரத்தை மத்திய அரசு பெற்றிருக்கிறது.

அடிப்படைத் தொழிற்சாலைகள், கனரக தொழிற்சாலைகள் இரண்டும் முக்கியத்துவம் பெற்றதோர் தீவிரமான தொழில் வளர்ச்சி திட்டத்தின் இரண்டாவது நோக்கமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அடிப்படைத் தொழிற்சாலைகளும், கனரக தொழில்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏனெனில் அவைகள்தான் பொருளாதார சீரமைப்புக்கு பல்வேறு துணைத்தொழில்கள் தோன்றுவதற்கு மூலகாரணமாய் அமைந்திருக்கிறது.

இது குறித்து கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வந்திருக்கிறது. மிகப்பிரமாண்டமானவை என்று பண்டித நேரு வால் வர்ணிக்கப்படும் அனைத்தும், ஏனைய மாநிலங்களைப் புறக்கணிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெரிய தொழிற்சாலைகள் என்ற பட்டியலின் வரிசையில், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நமது மாநிலத்திற்கு ரூ.76 லட்சம் தான் ஒதுக்கப்பட்டது.

மத்திய சர்க்கார் நிர்வாகத்தின் கீழ் ஐம்பது கோடி ரூபாயில் நெய்வேலித் திட்டம் இருக்கிறது என்று கூறி புகலிடம் தேடிக்கொள்வதோடு அத்துடன் மன நிறைவு கொள்கிறோம்.

ஆனால் பல்வேறு அரசியல் கட்சிகள் வற்புறுத்தியும் கூட அடிப்படை, தொழில்களுக்கும், கனரகத் தொழிற்சாலைகளுக்கும் வேண்டிய தேவையான பொருள்கள் இன்று வரை பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

எனவே இந்த மாநிலத்தில் அடிப்படை, கனரகத் தொழிற்சாலைகள் வளருவதற்கான முறையில் சுறுசுறுப்-