பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பாக கவனம்செலுத்துவதோடு கருணையும் காட்டி போதுமான நிதி ஒதுக்க வேண்டும்.

பல்வேறு மாநிலத்திலும் தொழிற் வளர்ச்சியில் காட்டப்பட்டு வந்த பேதம் மக்கள் மத்தியில் கசப்புணர்ச்சியை வளர்த்துவிட்டிருக்கிறது என்பது தற்போது நன்கு உணரப்பட்டு வருகிறது. ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யும் பொருட்டு கட்சிகளின் கோரிக்கைகள் அணைத்தும் புறக்கணிக்கப்பட்டுவிட்டன.

எனவே இந்த மாநிலம் உறுதியான உள்ளத்துடனும், திடமான முயற்சியுடனும் தங்களது பலமான கோரிக்கையை மத்திய சர்க்கார் முன்வைக்கவேண்டும். நாட்டின் சரிசமமான வளர்ச்சியை உணர்ந்து அவைகளுக்கு உறுதியளிக்கும் முறையில் முயற்சி எடுத்துக்கொள்கின்ற தன்மையில், தொழிற்சாலைகள் முறையான வகையில் பகர்ந்தளிக்கவேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

தொழில் வளர்ச்சிக் குறைவுக்கு நிலக்கரி பற்றாக்குறை என்று காரணம் காட்டப்படுகிறது. இந்த வாதத்திற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.

தீர்க்க தரிசனத்தோடு துணிவான முறையில் திட்டமிடுவார்களானால் இயற்கைச் செல்வங்களைத் தேடிப் பிடிப்பதோடல்லாமல் இயற்கைச் சக்திகளையும்வென்று தான் வயப்படுத்தி ஆக்க வேலைகளுக்கும் பயன்படுத்திமிகுந்த பலனைக் காணலாம்.

இயற்கை வளங்கள் குறைந்து காணப்படும் நாடுகள் அனைத்தும் வியக்கத்தக்க முறையில் தொழில் மயமாக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாடு அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

புனரமைப்பிற்கான அனைத்துத்துறையிலும் நாட்டங்கொண்டு முயற்சி எடுக்கப்பட்டு வரும்போது துவக்கத்திற்கான சில வசதிக்குறைவுகளைச் சுட்டிக்காட்டுவதானது மன்னிக்கமுடியாத குற்றமாகும்.