பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

பிரஸ்தாபிக்கிறேன். இவ்வளவு நம்பிக்கைக்கும் காரணமுண்டு. யோகாசனா சக்தி படைத்த ஒவ்வொரு மனிதனும் தன்னைச்சுற்றி நிகழும் ஒவ்வொரு காரியத்திற்கும் காரணம் கண்டுபிடிக்க முயல்கிறான் என்பது எனது அபிப்பிராயம். நேரடியான தெளிவுகள் (Proofs) கிட்டாதவிடத்தில் வேதாந்த தத்துவம் முக்கியமான இடம்பெறுகிறது. நான் முன்னர்குறிப்பிட்டுள்ளபடி, தத்துவ சாத்திரமென்பது மனித வர்க்கத்தின் பலவீனத்தால் தோன்றியதென்று, எனது புரட்சிக்கார கூட்டங்களில் ஒருவர் அடிக்கடி கூறுவார். உலகத்தின் முற்கால, தற்கால, பிற்கால நிகழ்ச்சிகள்; உலகம் ஏன், எங்கிருந்து உற்பத்தியாயிற்று? முதலிய இரகசியங்களைப் பரிசீலனை செய்யப் போதுமான சாவகாசம் நமது முன்னோர்களுக்கு ஏற்பட்டபொழுது, அவர்கள் ஒவ்வொருவரும், நேரடியான தெளிவுகள் கிஞ்சிற்றும் கிடையாத காரணத்தால் தங்கள் தங்கள் மனம் போன போக்கில் முடிவு கட்டப் பிரயத்தனப்பட்டார்கள். இதே காரணத்தால்தான், பல வேறுபட்ட மதங்களின் ஆதாரமான, அடிப்படையான கொள்கைகளில் பெருத்த வித்தியாசமிருக்க காண்கிறோம். இன்னும் சில சமயங்களில் மூலாதரத் தத்துவங்கள் ஒன்றுக்கொன்று நேர்முரண்பட்டு முட்டிக்கொள்ளும் தன்மையிலிருப்பதையும் பார்க்கின்றோம். கீழ்நாட்டுத் தத்துவசாஸ்திரமும், மேல்நாட்டுத் தத்துவசாஸ்திரமும் மாத்திரந்தான் வித்தியாசப்பட்டுக் காணப்படுவதாகக் கருதவேண்டாம்.

மத மோதல்கள் !

ஒவ்வொரு நாட்டுத் தத்துவ சாஸ்திரங்களிலும் பலதிற அபிப்பிராய பேதங்கள் காணக் கிடக்கின்றன. கீழ் நாட்டு மதங்களை எடுத்துக்கொண்டால், மகம்மதிய மதம் ஒருக்காலும் இந்துமதத்தோடு இணைந்து நிற்பதில்லை. இந்தியாவைமட்டும் நோக்கினால், ஜைன மதமும், பவுத்த மதமும், பிராமண மதமாகிய இந்து மதத்திலிருந்து முற்றும் வேறாகக் காணப்படுகின்றன. இந்து மதத்திலேயே ஒன்றுக்கொன்று முரண்பாடான ஆரிய சமாஜமும், சனாதன தர்மமும் அடங்கி இருப்பதைப் பார்க்கலாம். மற்றும், சாருவாகருடைய (Charwak) கொள்கையோ, பண்-