பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

செய்யவேண்டும்? முதன் முதலாக இப்பொழுதுதான் பொதுமக்களுக்கு இத்தகைய கேள்விகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. முதன் முதலாக இப்பொழுதுதான் பொதுமக்களால் இது காரியானுஷ்டானத்திலும் கையாளப் படுகிறது. எனவே இவ்விஷயத்தை விரிவாக ஆராய்ச்சி செய்ய நேரிட்டிருக்கிறது.

முதல் கேள்வியைப் பொறுத்தவரையில் என்னை நாஸ்திகனாகும்படித் தூண்டியது எனது அகங்காரமல்லவென்பதைத் தெளிவுபடுத்திவிட்டேனென்றே கருதுகிறேன். என்னுடைய விவாதத்தின் போக்கைப்பரிசீலனை செய்து பொருத்தமுடையதா அல்லவா என்று தீர்மானிக்கவேண்டிய பொறுப்பு வாசகர்களைச் சேர்ந்ததேயன்றி என் பொறுப்பன்று. அப்பொழுதுள்ள நிலைமையில் கடவுள் நம்பிக்கையானது எனது வாழ்வில் ஆறுதலளித்து பாரத்தையும் குறைக்கும் கடவுள் நம்பிக்கையற்ற தன்மையோ, சந்தர்ப்பங்களையெல்லாம் சங்கடத்திற்குள்ளாக்குவதோடு நிலைமையை மோசமாக்கி கடுமையும் கொடுமையும் நிறைந்ததாகச் செய்துவிடும். மதோன் மத்தர் போதம் துளியளவு இருப்பினும் வாழ்க்கை காவிய வர்ணனைக் காண்பதுபோல் நயமுள்ளதாகத் திகழும். ஆனால் எனது முடிவுக்குத் துணை புரிய எந்தவிதமான போதையையும்—மயக்க வெறியையும்—நான் விரும்பவில்லை. நான் ஒரு யதார்த்தவாதி. என்னுள் எழும் உணர்ச்சியைப் பகுத்தறிவின் துணையால் அடக்கியாள முயற்சித்துக் கொண்டு வருகிறேன். இந்த முடிவை அடைவதில் நான் எப்பொழுதுமே வெற்றி பெற்று வரவில்லை. ஆனால் மனிதனுடைய கடமை இடையறாது முயற்சிப்பதே. ஜெயாப ஜெயம் சந்தர்ப்பத்தையும் சுற்றுச்சார்புகளையும் பொறுத்தது.

தத்துவ சாத்திரம்—மனித வர்க்கத்தின் பலகீனமே.

இரண்டாவது கேள்வியைப் பொறுத்த வரையில் அன்றும் இன்றும் நடைமுறையில் இருந்துவரும் கடவுள் நம்பிக்கையை நிராகரிப்பதற்குக் காரணம் அகங்காரமல்லவென்றால், வேறு போதுமான தக்கக் காரணங்கள் இருக்க வேண்டும். ஆம் இவ்விஷயத்தைப்பற்றி இங்கு