பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

நிலைக்குக் கொண்டுவந்துவிடும். மனத்தால் எண்ணாது, மூளையால் யோசியாது, சலனமின்றித் தேங்கி நிற்பதன் பலனே இந்நிலைமை. ஆராய்ச்சித் திறனும் சுயேச்சையாக யோசிக்கும் மனப்பான்மையும் புரட்சிக்காரனின் இன்றியமையாத மிகமிக அவசியமான இரு பெருங்குணங்கள்.

“மகாத்மாஜி ஒரு பெரியவர், ஆதலால் அவரைக் குறை கூறக் கூடாது; அவர் உயர்நிலை அடைந்து விட்டார் என்பதற்காக அவர் சொல்வதெல்லாம்—அரசியல் துறையிலோ, பொருளாதாரத் துறையிலோ அன்றி மதத் துறையிலோ, பொருளாதாரத் துறையிலோ அன்றி நீதி தர்மத் துறையிலோ—சரியானதேயாகும்; உனக்குச் சரியென்று பட்டாலும், படாவிட்டாலும் ‘ஆம் அவர் கூறுவது உண்மைதான்’ என்று சொல்லித் தீரவேண்டும்” என்கிற இப்படிப்பட்ட மனப்பான்மை நம்மை முன்னேற்றப் பாதையில் ஒரு அடிகூட நடத்தாது. இது மிக மிகப் பிற்போக்கான எண்ணம்.

பழிகள் வரும்

நம்முடைய முன்னோர்கள் ஏதோ உயர்ந்த வஸ்துவான சர்வசக்தியுள்ள கடவுள் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தவர்களென்ற காரணத்திற்காக. யாரேனும் ஒருவன் அந்த நம்பிக்கையின் உண்மையை மறுக்கத் துணிந்தால், அல்லது அந்த சர்வ சக்தி பொருந்திய வஸ்துவை மறுப்பதற்குத் திடங்கொண்டால், அவன் மதத்துரோகியென்றும் விசுவாச காதகனென்றும் பழித்துரைக்கப்படுகின்றான். அவனுடைய வாதங்கள், எதிர்வாதங்களால் அசைக்க முடியாதபடி ஆணித்தரமானவைகளாயிருந்தால் அவனுடைய உணர்ச்சி பயங்கரமான கஷ்ட நிஷ்டூரங்களாலும் சர்வசக்தியுள்ள கடவுளின் கோபாக்கினியாலும் சிதறடிக்கப்படாத வன்மையுடையதாயிருந்தால், அவனை அகங்காரம் பிடித்தவனென்றும், அவனுடைய உணர்ச்சியைத் தற்பெருமை கொண்டதென்றும், எள்ளி இழித்துத் தூற்றுகிறார்கள். பின்னர் ஏன் இவ்வாஸ்திக சிகாமணிகள்— இந்த வீண் வாதத்தில் காலங்கடத்த வேண்டும்? சகல விஷயங்களையும் பூராச்சங்கதிகளையும் பூரணமாகத் தர்க்கித்துவிட ஏன் முயற்சி