பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

உறிஞ்சிக்கொண்டிருப்பதையும், சாதாரண மனிதனும் நினைத்தால் நெஞ்சம் திடுக்கிடும் மாதிரி மனித சக்தி மிதமிஞ்சித் துர்விநியோகஞ் செய்யப்படுவதையும் சகிப்புத் தன்மையோடு அல்ல—உணர்ச்சி மழுங்கிய தன்மையோடு பார்த்துக்கொண்டிருந்து கொள்ளைக்கிரையாகும் தொழிலாளிகளிலிருந்து—அபரிமிதமாக உற்பத்தி செய்த பண்டங்களை உற்பத்தி செய்த மக்களின் அவசியத்தைத் தவிர்ப்பதற்குப் பங்கிட்டுக் கொடுப்பதைவிட, கடலில் கொட்டி அழித்துவிடுவதைத் தேர்ந்தெடுக்கும் மனப்பான்மையிலிருந்து—மனிதர்களின் எலும்புகளையே அஸ்திவாரமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் ராஜாதி ராஜாக்களின் வானமளாவிய அரண்மனைகள் வரையில்... இவைகள் எல்லாவற்றையும், அவன் (கடவுள்) நன்றாக கண்ணைத் திறந்துப் பார்வையிட்டுவிட்டு, “எல்லாம் நன்றாயிருக்கிறது” என்று சொல்லட்டும். “ஏன்? எதற்காக?” என்பதுதான் எனது கேள்வி. நீங்களோ மவுனம் சாதிக்கிறீர்கள் அல்லவா ? அப்படியானால் சரி ; நான் மேலே செல்கிறேன்.

நல்லது ! இந்துக்களே! நீங்களே இன்று-கஷ்டப்படுகிறவர்கள் எல்லோரும் பூர்வ ஜென்மத்தில் பாவஞ் செய்த கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். இன்று மக்களை அடக்கி ஒடுக்கி நசுக்கித் துவைக்கும் ஆதிக்க வர்க்கத்தினர் எல்லோரும், அவர்களுடைய பூர்வ ஜென்மத்தில் புன்னிய மூர்த்திகளாக, மகானுபாவர்களாக இருந்தமையால், இப்பிறப்பில் ஆட்சியையும் அதிகார ஆதிக்கத்தையும் அனுபவிக்கிறார்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுடைய முன்னோர்கள் அபார யுக்தி நுட்பமுடையவர்களென்பதையும், அறிவியல் வாதமும், அவநம்பிக்கையும், செய்யும் முயற்சிகளையெல்லாம் உடைத்து நொறுக்கத் தகுந்த தன்மை கொண்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கண்டுபிடிக்கப் பகீரதப் பிரயத்தனஞ்செய்தார்களென்பதயும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்த வாதம் உண்மையாகவே ஊற்றுக்கு நிற்குமா என்பதை அலசி ஆராய்வோம்.

குற்றவாளிகள் மீது சுமத்தப்படும் தண்டனையை, பிரசித்திப் பெற்ற ஜூரிகள் அபிப்பிராயப்படி மூன்று