பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வகையாகப் பிரிக்கலாம். அவைகளாவன : பழிக்குப் பழிவாங்கல், பதிலுக்குப் பதில் கொடுத்தல், சீர்திருத்தல், பயங்காட்டித் தடுத்தல். பழிக்குப் பழிவாங்கும் கொள்கையானது முற்போக்குடைய மதியூகிகள் எல்லோராலும் பலமாகக் கண்டிக்கப்படுகிறது. பயங்காட்டித் தடுக்கும் முறையும் அம்மாதிரியே கண்டிக்கப்படுகிறது. சீர்திருத்தும் வழி ஒன்றுதான், மனித முற்போக்குக்கு முக்கியமானதாயும். இன்றியமையாததாயுமிருக்கின்றது இது குற்றஞ் செய்தவனைக் கடுமையாகத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவனை யோக்கியப் பொறுப்புடைய, சமாதானத்தை நேசிக்கின்ற பிரஜையாக சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுக்கும் லட்சியத்தைத் தன்னகத்தடக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் கடவுள், தான் குற்றவாளிகள் என்று கருதுகிற மக்களுக்கு— நாமும் அம்மனிதர்களைக் குற்றவாளிகளென்றே வைத்துக் கொள்வோம். விதிக்கும் தண்டனையின் தன்மை என்ன ? நீங்கள் கடவுள் அவர்களை மாடாகவும், பூனையாகவும், மரமாகவும், கொடியாகவும் இன்னும் பலவகைப் பிராணீகளாகவும் அனுப்புகிறான் என்று சொல்கிறீர்கள். இத்தண்டனைகளை நீங்கள் 84 லட்சமென்று கணக்கெடுத்தும் வைத்திருக்கிறீர்கள். இதனால் மனிதன் அடையும் சீர்திருத்தமென்ன? பூர்வத்தில் பாவஞ்செய்ததன் பயனாக, போன ஜென்மத்தில் கழுதையாகப் பிறந்தோமென்று உங்களைச் சந்தித்த மனிதர்கள் எவரேனும் கூறியதுண்டா ? ஒருவரும் இல்லை. உங்களுடை புராணங்களைப் புரட்டி உதாரணங்காட்டப் புறப்பட்டு விடாதீர்கள். ஏனெனில், உங்கள் புராணங்களை சந்தியிலிழுக்க நான் விரும்பவில்லை. இதுவுமன்றி, தரித்திரனாய் இருப்பதுதான் உலகத்திலேயே பெரும்பாவமென்பது உங்களுக்கு தெரியுமா? தரித்திரம் ஒரு பாவம், அது ஒரு தண்டனை. குற்றவாளியைக் குற்றஞ்செய்வதிலிருந்து தடுக்கமுடியாது. அதிகப்படியாகக் குற்றம் செய்வதற்குத் தூண்டும் தன்மை பொருந்திய தண்டனைகளை விதிக்கும் கிரிமினல் சட்ட நிபுணனையோ (Criminologist) ஜூரியையோ அன்றி, சட்டகர்த்தாவையோ நீங்கள் எவ்வாறு புகழ்வீர்களென்று