பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

நீங்கள் தலையைச் சுற்றி மூக்கைப் பிடிக்கும் தர்க்கவாதத்தில் கிளம்பிவிட வேண்டாம். ஏனென்றால் அது பிரயோஜனப்படாது. பிரிட்டிஷார் இங்கு ஆட்சி புரிகிறார்கள். அவர்கள் ஆட்சி செய்வது கடவுளின் திருவுளத்தாலன்று. அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது. நமக்கு அவர்களை எதிர்க்கத் துணிவில்லை. இதுதான் காரணம். தெய்வ சகாயத்தாலன்று. நம்மை அடக்கி அவர்கள் ஒடுக்கிக் காலடியில் போட்டு மிதித்துத் துவைக்கிறார்கள். துப்பாக்கி, பீரங்கிகள், வெடிகுண்டு, பாணாத்தடிகள், போலீஸ் ராணுவங்கள், நமது உணர்ச்சியற்ற மானங்கெட்ட தனம் இவைகளாலேயே அவர்கள் சமுதாயத்திற்கு விரோதமான மிகவும் வருந்தத்தக்க பாதகத்தை, ஒரு தேசம் மற்றொரு தேசத்தைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கும் குற்றத்தை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். (இதைக் கண்ணாரக் கண்ட பின்பும்) கடவுள் எங்கே இருக்கிறான்? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? மனித வர்க்கத்தின் கஷ்ட நிஷ்டுரங்களையெல்லாம் தமாஷாக பார்த்து அனுபவித்து பொழுது போக்கிக்கொண்டிருக்கிறான்? அவன் ஒரு பெரும் நீரோ! மாபெரும் செங்கிஷ்கான்! வீழ்த்துங்கள் அவனை !

இனி உலக உற்பத்தி, மனித உற்பத்தி ஆகியவைகளைக் குறித்து என்னிடம் காரணம் கேட்பீர்கள். ரொம்ப சரி, இவ்விஷயத்தைப்பற்றி நான் கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். இவ்விஷயத்தில் சிறிது பிரகாசமளிக்கும் பொருட்டு சார்ல்ஸ் டார்வின் என்ற உலகப் பிரத்திப் பெற்ற விஞ்ஞான புலவர் முயற்சித்திருக்கிறார். அவர் கூறும் உண்மைகளைப் படித்துப் பாருங்கள். சோகம்ஸ்வாமியால் எழுதப்பட்ட “சாதாரண அறிவு” (Common Sense) என்ற நூலையும் படித்துப் பாருங்கள்; அது உங்கள் கேள்விக்கு ஒருவாறு பதில் கூறும் இந்த உலகும் மனிதரும் இயற்கையின் ஓர் தோற்றம். பல வேறுபட்ட பொருட்கள் தற்செயலாகக் கலந்து, நெபுலே (Nebula) உருவத்திலாகிப் பிறப்பித்ததே இவ்வுலகம் எப்பொழுது? சரித்திரத்தை ஆராய்ந்து மிருகங்களையும், நீண்ட காலத்திற்குப்பின் மனிதனையும் உற்பவித்தது. டார்வினால் எழுதப்பட்ட “ஜீவராசிகளின் உற்பத்தி” (Origin of the-