பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

Species) என்ற நூல் இவ்விஷயத்தில் குறிப்பிட்டுப் படிக்கத்தக்கது. மனிதன் தோன்றிய பின் நடந்த நிகழ்ச்சிகளெல்லாம், மனிதன் இயற்கையோடு இடையறாது போராடிய போராட்டமும், அவன் அதனை ஆட்சிசெய்ய எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களுமேயாகும். இதுவே உலக உற்பத்தியைப் பற்றிய இரத்தினச் சுருக்கமான விளக்கம்.

பூர்வ ஜென்மப் பலனா?

பூர்வ ஜென்மக் கர்ம பலன் இல்லையென்றால், ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே, குருடாகவோ, அல்ல நொண்டியாகவோ ஏன் பிறக்கிறது என்பது உங்கள் வாதத்தின் அடுத்த கேள்வி. இந்தப் பிரச்னையானது, கேவலம் உயிர்கள் சம்பந்தப்பட்ட சங்கதிதானென்று உயிர் நூல் வல்லுநர்களால் (Biologists) விளக்கிக் காட்டப்பட்டாகிவிட்டது. அவர்களுடைய அபிப்பிராயப்படி, இந்நிகழ்ச்சிகளின் பூராப் பொறுப்பும் பெற்றோர்களின் தோள் மீதுதான் விழுகிறது. பெற்றோர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் செய்கைகளின் பலனாகத்தான் பிறப்பதற்கு முன்னதாகவே குழந்தைக்கு அங்கவீனம் ஏற்படுகிறது.

சாரத்தில் சிறுபிள்ளைத்தனமுடையதாயிருந்தாலும். நீங்கள் இயல்பாகவே கேட்கும் வேறொரு கேள்வியுமுண்டு அதாவது, கடவுள் ஒருவர் இல்லையானால், ஜனங்கள் எவ்வாறு கடவுள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்கள்? என்பதுதான். இதற்கு விடை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கலாம். அவர்கள் பூதங்களிடம் தீய பைசாசங்களிடமும் எப்படி நம்பிக்கை கொண்டார்களோ அப்படித்தான் கடவுளிடமும் நம்பிக்கைக் கொண்டார்கள் ஒரு வித்தியாசமென்னவென்றால், கடவுள் நம்பிக்கை உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதன் தத்துவமும் மிக அபிவிருத்தியடைந்திருக்கிறது. தீவிரவாதிகளில் பலர், பிறரை வஞ்சித்து வாழும் பித்தலாட்டக்காரர், பொதுஜனங்களை அடிமையாக்கி வைத்திருக்க வேண்டுமென்ற சுயநல நோக்கத்தோடு, புத்திசாலித்தனமாக ஒரு கடவுளைச் சிருஷ்டித்து ஆஸ்திகப் பிரசாரம் செய்தார்களென்றும் அப்பால், அவ்விஷயத்தில் தாங்களே அதிகாரிகளென்றும்