பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

பதிப்புரை


“நான் நாத்திகன் — ஏன்?” என்ற நூல் தோழர் பகத்சிங்கின் புகழ்பெற்ற நூலாகும். தோழர் பகத்சிங் ‘புரட்சி வீரன்,’ ‘தூக்குக் கயிற்றை முத்தமிட்ட தீரன் என்று வெளி உலகம் அறிந்த அளவுக்கு, அவற்றை எல்லாம் விட ‘அவன் ஒரு நாத்திகன்’ என்பதை அறிய முடியாமல் அவன் நாத்திகம் மிக ஜாக்கிரதையாக இருட்டடிக்கப்பட்டு விட்டது இந்நாட்டில். 1934-ம் ஆண்டு முதன் முதலாக இந்நூலை வெளியிட்டோம். அடுத்து, “உண்மை” இதழில் இதாடர்ந்து வெளியிடப்பட்டது. அது மீண்டும் நூல் வடிவில் வெளிவர வேண்டும் என்று அன்பர்கள் ஆர்வம் காட்டினர். இப்பொழுது மீண்டும் அய்ந்தாம் பதிப்பாக வெளிவருகிறது. படியுங்கள் — அந்தப் பச்சை நாத்திகனை அறியுங்கள்!

–பதிப்பகத்தார்