பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 01 - - நாம் அறிந்த கி.வா.ஜ.

எனப் பரிவோடு சொல்லி @ உத்தரவு. கொடுத்தார். - -

இவர்கள் வந்த காரியம் முடிந்த பெருமகிழ்ச்சியோடு: சேந்தமங்கலம் திரும்பினார்கள்.

டிரீமத் ஐயரவர்களுக்கு எழுதிய முதல் கடிதம்

சேந்தமங்கலம் வந்தபின் இவர் தம் நண்பர்களை யெல்லாம் பார்த்து ரீமத் ஐயரைச் சிதம்பரத்தில் தரி, சித்து உரையாடி வந்ததைச் சொன்னார். -

சென்னைக்கு வந்தால் தம்மிடம் இருந்து தமிழ் படிக்கலாம் என்பதாக ஐயரவர்கள் சொன்னதை, நினைந்து நினைந்து மகிழ்வுற்றார். -

என்றாலும், சென்னைக்குப் போனால் தம் செலவுக்கு என்ன செய்வது என்ற எண்ணம் அவ்வப்போது இவரது மனத்தை அரிக்கத் தொடங்கியது. பண உதவி கோரிப் பெற்றோரிடமோ, பிறரிடமோ நின்றால் சென்னைக்குச் செல்ல முடியாமற் போகலாம் என அஞ்சினார்.

அதனால், ரீமத் ஐயரிடமிருந்து கடிதம் வருவதற். குள், தாமே கொஞ்சம் பணம் சேமித்துக்கொள்ள வேண்டுமென்ற உறுதி இவருக்குப் பிறந்தது. தாம் பார்த்துக்கொண்டிருந்த பணிகளில் உற்சாகத்துடன் ஈேடுபடலானார். .

சென்னை போகுமுன் பூஜ்யர் த்ரோவர் தம்பதிகளின் பாடங்களைச் சொல்லி முடித்துவிட வேகம் காட்டினார். தமக்குக் கிடைத்த சம்பளத்தைச் சிக்கனமாகச் செல்வு செய்து, மீதியைச் சே மி த் து வைத்துக்கொள்ளத் தொடங்கினார்.

இடையில் ரீமத் ஐயருக்கு (9-3-1927 இல்) ஒரு. கடிதம் எழுதினார்டு • , ‘. . . . . . . . . . . .

நாமும் எத்தனையோ அறிஞர் பெருமக்களைச் சந்திக்கிறோம். நம்மை நாமே பெரியவர்களாக வியந்து: