பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 1 00

‘அன்றுமுதல் இன்றுவரை எனக்கு ஒரு வார்த்தை கற்பித்த ஐயரவர்களை என் ஆசிரியராகக் கொண்டு தொழுது வருகிறேன்’ எனப் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் ரீமத் ஜயரது ‘சதாபிஷேகத்தின்போது குறிப் பிட்டார்கள்.

இவரும் “தையல்’ என்ற ஒரு வார்த்தையில் எவ்வளவு நுட்பமான கருத்தை ஸ்ரீமத் ஐயர் எடுத்து விளக்குகிறார் என வியந்து நின்றார்.

ஸ்ரீமத் ஐயர் அப்பொழுதே தம்மை மாணவனாக ஏற்றுக்கொண்டு விட்டதைப் போன்ற உணர்ச்சி கொண்டார். த்ாம் தம் ஆசிரியர் பெருமானிடம் பாடம் கேட்கத் தொடங்கிவிட்டதைப் போன்ற மகிழ்ச்சியில்

மிதந்தார். .

இவரைப் பார்த்து ஸ்ரீமத்'ஐயர், எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. வயிற்றில் அடிக்கடி வலி உண்டா கிறது. உணவு சரியாகச் சீரணம் ஆவதில்லை. அதனால் கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து விலகிச் சென்னைக்குப் போகலாம் என்று இருக்கிறேன். உனக்கு மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விருப்பமா? அல்லது என்னிடமிருந்து பாடம் கே ட் ப த ற் கு விருப்பமா?’ என்று கேட்டார். • .

தங்களிடம் இருந்துகொண்டே பாடம் கேட் பதற்கு நான் விரும்புகிறேன்’ என்று இவர் சொன்னார். -

இவரது பதில் ரீமத் ஐயருக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்தது. நீங்கள் இப்போது இவரைத் தங்களுடன் சேந்தமங்கலம் அழைத்துச் செல்லுங்கள். நான் சென்னைக்குப் போனவுடன் எழுதுகிறேன். இவருடைய பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, ஒரு நல்ல நாள் ப்ார்த்துச் சென்னைக்கு அனுப்பி வையுங்கள். சென்னையில் ஆகாரச்செலவிற்கு வேண்டிய ஏற்பாட்டை மட்டும் இவர் செய்துகொண்டு வந்தால் போதும்'