பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 - நாம் அறிந்த கி.வா.ஜ.

கொலை செய்தான் என்ற பொருளைத் தையல் என்பது: குறிக்கும்.வைத்தீசுவரன் கோவிலில் உள்ள பாலாம்பிகை யைத் தையல்நாயகி என்று சொல்வதனால் தையல் என்றால் இளம்பெண் என்பதை உணர்ந்துகொள்ளலாம்’ என்பதாக ஸ்ரீமத் ஐயர் சொன்னார்,

இப்படி யாரைப் பார்த்தாலும் அவரவர்கள் நிலை க் கேற்பத் தமக்குத் தெரிந்த பயனுடைய கருத்தை எடுத்து: சொல்வது ஸ்ரீமத் ஜயரது இயல்பு. -

ஒரு முறை ரீமத் ஐயர் ஒரு சிறுவனைப் பார்த்தார்’ அவனுக்கு வயது பன்னிரண்டு இருக்கும். பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தான். சிறு பையன்தானே என நினைக்காமல் அவனிடமும் பேச்சுக் கொடுத்தார். w ‘நீ என்ன படித்திருக்கிறாய்? உன் தமிழ்ப் பாடப் புத்தகங்கள் என்ன?’ எனக் கேட்டார்; ஏதோ ஒரு ‘ நூலைக் குறிப்பிட்டு, இதைப் படித்திருக்கிறாயா?” என வினவினார். - .. -

அதை எனக்குப் பள்ளிக்கூடத்தில் க ற் று க் கொடுக்கிறது இல்லை’ என அந்தப் பையன் கொஞ்சம் இலக்கணமாகச் சொன்னான்.

“தமிழில் இலக்கணமாகப் பேசுகிறாயே! என அவனது திறமையைப் பாராட்டினார்.அடுத்து, ‘ கற்றுக் கொடுக்கிறதில்லை’ என இரண்டு பதங்கள் உபயோகித். தாயே; அதை ஒரு பதமாகச் சொல் பார்ப்போம்’ என்றார். f - - -

அதற்குப் பதில் உரைக்கத் தெரியாமல் அந்தச் சிறுவன் திகைத்தான். அப்போது ரீமத் ஐயர், ‘கற்பிக் கிறதில்லை என்று சொல்லலாமல்லவா?’ என்றாராம்

அந்தச் சிறுவன் வேறு யாரும் இல்லை; தமிழில்: அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை, எழுதித் தமிழ், நாடகாசிரியர் எனப் புகழ்பெற்ற திரு பம்மல் சம்பந்த முதலியார்தாம்! o, , , , “, !”. . . . .