பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 - நாம் அறிந்த கி.வா.ஜ.

‘மிடியுளேன், மதிபெற்று அடிமை யாகும்

அடியேன் விருப்பம் அருளுக’ -

என நீண்டதொரு கவிதைமூலமே துணிச்சலாக விண்ணப் பித்துக் கொண்டிருக்கும் பாங்கு படித்து மகிழத் தக்க தாக உள்ளது.*

ஸ்ரீமத் ஐயருக்கு, தாம் இப்படிக் கவிதைமூலம் கடிதம் எழுதலாமா எனக் கூசவில்லை. முருகன் திருவருள்ால், நாணமும், அச்சமும் கழல, தன்னம்பிக்கை ாழிகுதியும், உடைய கவிஞனாக இவர் விளங்கியதை இவரது, இச்செயல் வெளிப்படுத்துகிறது. -

சேந்தமங்கலத்தில் இருப்புக் கொள்ளாமை

ரீமத் ஐயர் இவர்களிடம் குறிப்பிட்டதுபோல் (11-3-27-இல்மீனாட்சி கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு சென்னை திரும்பினார். சிதம்பரத்தில் இருந்த நண்பர்கள் பெரிய கூட்டம் கூட்டி அவருக்குப் பிரியாவிடை அளித்தார்கள்.

சென்னை திரும்பியவுடன் அவரால் தம் பணிகளை உடனே தொடர முடியவில்லை. இரண்டொரு மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

அதற்குள் சென்னைப் பல்கலைக் கழகத்தினர் சங்க இலக்கியங்கள்பற்றிப் பத்து நாட்கள் தொடர்ந்து சொற் பொழிவு ஆற்றவேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டார்கள். - -

தம் உடல்நலம் சரியில்லாததால் அப்பணியை ஏற்க அவர் தயங்கினார். என்றாலும், “சிண்டிகேட் உறுப்பின ராக் அப்போது இருந்த திரு கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் அன்போடு வற்புறுத்தவே அவரது வார்த்தையைத் தட்ட முடியாது இசைந்தார். . . . .

முழுக் கடிதமும் இ ைன ப் பி ல் சேர்க்கப் பட்டுள்ளது. * . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ;