பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி l 04.

அதுகுறித்து ஸ்ரீமத் ஐயர் சிந்தித்துக்கொண்டிருந்: தார். . . . - -

  • வேண்டிய செளகரியம் செய்துகொண்டு வரலாம்’ என ஸ்ரீமத் ஐயரிடமிருந்து தமக்குக் கடிதம் வந்ததுமுதல் இவருக்குச் சேந்தமங்கலத்தில் இருப்பே கொள்ளவில்லை. இவரிடம் கொஞ்சங் கொஞ்சமாக ஐந்தாறு மாதங் களில் நூறு ரூபாய்க்கும் அதிகமாகச் சேர்ந்துவிட்டது. சென்னை போக வேண்டுமென்ற பரபரப்பும் அதிக மாயிற்று.
  • ...,

இதைச் சேந்தமங்கலம் ஜமீன்தார் உணராமலில்லை. இவரது மன உளைச்சலைப் போக்க ஒரு நாள்,ஜமீன்தார் இவரிடம் சொன்னார், ‘ஐயா, அகில இந்தியக் காங்கிரஸ் மகாநாடு சென்னையில் டிசம்பர் மாதம் நடக்க இருக் கிறது. அப்போது நாம் எல்லோரும் சென்னை போக லாம். அதற்குள் ஒரு முறை மோகனூர் போய் உங்கள் தாய்தந்தையரிடம் சொல்லிக்கொண்டு வந்துவிடுங்கள்’ என்றார். . . . . . - -

அதைக் கேட்டவுடன் இவருக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. அந்த மாதக் கடைசியில் மோகனூர் சென்றார். . . - தாய் தந்தையர்களுடன் சேர்ந்தாற்போல் சில நாட்கள் தங்கினார். காவேரியில் நீராடிக் காந்தமலை முருகனைத் தரிசனம் செய்துகொண்டார்.

கண்ணின் ஒளியாய்க் கருத்தில் அறிவாகி விண்ணில் இரவியாய் மேலோங்கும் அண்ணலைக் காந்த மலைக்கோயில் கந்தபிரான் தன்னையன்றிப் போந்த எனக் குண்டோ புகல்’ என அவன்மீது பல பாடல்களைப் பாடி மனம் கசிந்தார்.

உபாசனா காலத்தில், தாம் பயன்படுத்திய o யும், தண்டத்தையும் கோவிலில் சமர்ப்பித்தார்.