பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஆசானின் இல்லத்தில்

வந்து சேர்ந்தது

1927-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி யி ல், சென்னையில் அகில இந்தியக் காங்கிரஸ் மகாநாடு நடை பெற்றது. அந் த மகாநாட்டிற்குச் செல்லும்போது சேந்தமங்கலம் ஜமீன்தார்: கி.வா.ஜ-வை மகாமகோபாத் தியாய ஐயரவர்களிடம் தமிழ் பயிலும் நிமித்தம் அழைத்துப் போகிறார் என்ற செய்தி இவருடைய தாயாருக்குப் பெருமகிழ்ச்சி தந்தது என்பதைச் சொல்ல புைம் வேண்டுமோ?

.ெ சன் ைன யி ல் திருவேட்டீசுவரன்பேட்டையில், பிள்ளையார் கோவில் தெருவில் இருந்தது ஸ்ரீமத் ஐயரின் இல்லம், கும்பகோணம் கல்லூரியில் பார்த்த வேலை யைத் தமக்கு வாங்கித் தந்த தியாகராச செட்டியாரின் ஞாபகார்த்தமாக அந்த இல்லத்திற்குத் தியாகராச விலாசம்’ எனப் பெயரிட்டிருந்தார் ஐயரவர்கள். :

தியாகராச விலாச’த்திற்கு அன்பர் கி.வா.ஜ-வுடன் ஜமீன்தார் சென்றபோது சற்று ஒய்வு எடுத்துக்கொன் டிருந்த ஸ்ரீமத் ஐயர் இவர்களைக் கண்டவுடன் தமது சாய்வு நாற்காவியிலிருந்து மெல்ல நிமிர்ந்து எழுந்தார்கு இவர் சட்டென்று ஒரு கரத்தால் அவரது முதுகைத் தாங்கிக்கொண்டார். மற்றொரு கரத்தால் அவரது வலது கையைப் பிடித்துக்கொண்டார். o . .

ஸ்ரீமத் ஐயருக்கு அப்போது வயது எழுபத்திரண்டு: . ஒடியாடி முதிர்ந்து தளர்ந்த உடல். இவருக்கோ வயது இருபத்திரண்டு: கட்டைக் கருங்காளை, பழந்தமிழ்,

5T7 . .