பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் I 0.6

இலக்கியச் செல்வங்களைத் திரட்டி 50Q T வழங்கியதோடு தினமும் தேவார பாராயணம் செய்யும் சிவனடியாராகவும் விளங்கினார் டாக்டர் ஐயரவர்கள்; இவரோ தினமும் திருப்புகழ் பாராயணம் செய்யும் முருகனடியாராகக் காட்சியளித்தார்: -

இவர்களுடைய பிணைப்பு இவருடன் வந்தவர் களுக்குப் புல்லரிப்பை உண்டாக்கியது. ‘ ‘ .

தமக்கு வேண்டிய எதையும் வாய்விட்டுச் சொல்லும் வழக்கம் ஐயரவர்களிடம் இல்லை. அவரது குறிப்பறிந்து நடந்துகொள்பவர்களை அவருக்கு நிரம்பப் பிடிக்கும்.

ஐயரவர்களுக்கு இவரை, மிகவும் பிடித்துவிட்டது என்பதை இவருடன் வ ந் த வர் கள் உணர்ந்து கொண்டார்கள்: . -

கிச்சு உடையார், ‘உங்கள் அருளால் இவருக்கு எல்லா நன்மைகளும் உண்டாக வேண்டும்’ என்று சொன்னார். . . . . . .

யாரை யாரிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமோ அந்தப் பணியை நாங்கள் செய்து விட்டோம்’ என ஐராவத உடையார் சொன்னார். அப்போது அவருடைய கண்கள் கலங்கின. வாய் குழறிற்று. அதே நேரம் இவருக்கும் கண்களில் நீர் வந்து

இவரைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இவருக்கு ஒரு குறையும் ஏற்படாது; நான் பார்த்துக் கொள்கிறேன்’ என ஐயரவர்கள் இவருடன் வந்தவர் களுக்கு ஆறுதல் சொன்னார்.

இவருடன் வந்தவர்கள் இவரைச் சென்னையில் விட்டு விட்டுச் சேந்தமங்கலம் திரும்பிச் சென்றார்கள். k