பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 நாம் அறிந்த கி.வா.ஜ. ஆசிரியப்பிரானின் குடும்பம்

ஸ்ரீமத் ஐயரின் மனைவியார் அப்போது இல்லை.” ஒரே குமாரரான கல்யாணசுந்தரமையரும், மருமகளுமே ஸ்ரீமத் ஐயருக்குப் பெருந்துணையாக அந்த வீட்டில் இருந்தார்கள். *

கல்யாணசுந்தரமையருக்கு ஐந்து பெண்கள். ஒரே ஒரு புதல்வர் - அவரது ஐந்தாம் குழந்தை பெயர் திரு க. சுப்பிரமணியம்.

- ஐயரவர்களின் வீட்டிற்கு இவர் வந்தபோது திரு சுப்பிரமணியத்திற்கு வயது 12 இருக்கும். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அவருடைய தமக்கைகள் சுப்பிரமணியத்தை, ‘தம்பி, தம்பி என அழைப்பதைக் கேட்டு இவரும் அவரைத் தம்பி என்றே அழைக்க லானார். - . -

திரு கல்யாணசுந்தரமையரின் சிறிய தகப்பனார் வே. சுந்தரேசையருக்கு வயது அப்போது 56 இருக்கும்: தபால்-தந்தி இலாகாவில் பணியாற்றிவந்தார்.அவர் தம் மனைவி குழந்தைகளுடன் திருவல்லிக்கேணியில் தனியாக வசித்து வந்தார். என்றாலும், அவரும் அடிக்கடி வந்து பதிப்புப் பணியில் தம் தமையனாருக்கு உதவி வந்தார். அவருடைய மனைவியாரும் தம் மைத்துனரின் குடும்பத் தினரிடம் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். இவர் க ளு ைடய குழந்தைகள் கல்யாணசுந்தரமையரை *அண்ணா! அண்ணா என்று அழைப்பதைக் கேட்டு இவரும் ஸ்ரீமத் ஐயருடைய மகனாரை அண்ணா என்றே அழைக்கலானார். -

கல்யாணசுந்தரமையருக்கு அப்போது வயது 47 இருக்கும். சென்னை உயர்நீதி மன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் பணி புரிந்துவந்தார். %, - - t

8.5.1917-இல் காலமானார்கள்.