பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 10&

மேலை நாடுகளில் ஒர் எழுத்தாளர் என்றால் அவரது வேலை, எழுதிக்கொண்டே இருப்பதுதான். அவருடைய மற்ற வேலைகளைக் கவனித்துக்கொள்ள அவருக்குத் & co; Garuamarif (Private Secretary) g|Giolimit.

ஆசானின் பொறுப்புள்ள புதல்வர்

அதுபோன்றே ஐயரவர்களுக்குப் பழந்தமிழ் நூல்களை ஆராய்வது, குறிப்பெடுப்பது, பதிப்பிப்பது, மாணவர் களுக்குப் பாடம் சொல்வது ஆகியவையே வேல்ை; மற்ற வேலைகளையெல்லாம் அவருடைய புதல்வர் கல்யாண சுந்தரமையரே கவனித்து வந்தார்.

‘அன்றாடம் வரும் கடிதங்களைப் பிரிப்பது, ஐய ரவர்களிடம் காட்டி அவர் சொன்னபடி பதில் எழுதுவது, அச்சகத்தோடு தொடர்பு கொண்டு நூ ல் க ைள அச்சிடுவது, நூல்களின் விற்பனையைக் கவனிப்பது, ஐயரவர்களிடமுள்ள மாணவர்களுக்கு வசதி செய்து தருவது போன்ற பற்பல பணிகளைக் கல்யாண சுந்தரமையரே கவனித்து வந்தார்.

குடும்பத்தில் நடைபெறும் உரிய காரியங்கள் அனைத்தையும் புதல்வரே தம் தலைமேற் கொண்டு செய்வார். ஐயரவர்களுக்கு எதுவும் தெரியாது: யாரேனும் தம்மிடம் வந்து ஏதேனும் கேட்டால், ‘கல்யாணசுந்தரத்திடம் கேள்’’ எனச் சொல்லி ஒதுங்கி விடுவார்; லெளகிக் விஷயங்களில் என்றும் ஐயரவர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டதில்லை.

கல்யாணசுந்தரமையர் மிகவும் நல்லவர்; நேர்மை யானவர். மேலும் அவரைக் கொஞ்சம் புகழ்ந்தாலும் போதும்; எந்தக் காரி ய த் ைத யு ம் சாதித்துக் கொள்ளலாம். . *

பொய் பேசுபவர்களைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது. அவருக்குத் தெரியாமல் யாரும் எதையும்