பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 நாம் அறிந்த கி.வா.ஜ3

செய்யக்கூடாது தம்மிடம் கூறாமல் யாரும் எதையும் ஸ்ரீமத் ஐயரிடம் நேரில் சொல்வதையும் அவர் விரும்பிய தில்லை; ஆங்கில அரசாங்கப் பணியில் ராஜ விசுவாசத் துடன் ஈடுபட்டவர் என்பதால் கதர்ப்பக்தி, காங்கிரஸ் பற்று ஆகியவற்றில் ஈடுபாடில்லாதவர். குடும்பச் சூழ்நிலையைத் தகர்த்துக்கொண்டு பலதரப்பட்ட மக்களின் உதவிகொண்டு தாமே வளர்ந்தவர்.

கதர் அன்பர் கி.வா.ஜ.; அக்காலத்தில் 21 வயது ஆ கி யு ம் திருமணமாகாதவர். கல்யாணசுந்தரமை யுர் மிக மென்மையான மான்செஸ்டர் மல்வேட்டி கட்டி வந்தவர் தம் தந்தையாருக்கு உதவியாக இருக்கும் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் அந்தக் காலத்தில் ஏழெட்டு ரூபாயில் நல்ல மில் வேட்டி எட்டு முழம் வாங்கிக் கொடுப்பவர். தந்தையாரின் பெருமை மிக்க குடும்பக் கலாசார நிழலில், ஒதுங்கியே வாழப் பழ்கியவர். ஐந்து பெண் குழந்தைகளுக்குத் தந்தை: அரசியல் எதிர்ப்புக் கிளர்ச்சிகளினின்று ஒதுங்கி வாழ்ந்து வருபவர். தம் தந்தையாரின் வாக்கைத் தேவ வாக்காக மதித்து நடக்கும் பண்பாளராதலால் பிரம்மசாரியாக அம் கதர்ப்பக்தராகவும் இருந்த அன்பர் கி.வா.ஜ.விடம் அவருக்குப் பற்றுதல் இராவிட்டாலும், தம் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டதில்லை.

அன்பர் கி.வா.ஜ. இந்த நிலைமையை உணர்ந்து .ெ கா ண் டு கல்யாணசுந்தரமையரின் அன்பையும் மதிப்பையும் பெறும் வகையில் தாம் நடந்துகொள்ள வேண்டும், ஸ்ரீமத் ஐயரிடம் படிக்க வரும் நேரம் போக, மற்றச் சமயம் தாம் வெளியில் தங்கியிருக்க உடனே ஜாகை பார்க்க வேண்டும் என முடிவு செய்தார்.

ஆசானின் சகோதரர் கண்ட புதிய மாணவர்

அடுத்த நாள் ஸ்ரீமத் ஐயருடைய தம்பி சுந்தரேசையர் அங்கு வந்தார், தம் தமையனாரின் அருகில் இவர் இ ரு ப் ப ைத ப் பார்த்தவுடன் அவருக்கு வியப்பு