பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 110.

ஏற்பட்டது. ஸ்ரீமத் ஐயரின் இயல்பை அவர் அறிந்தவர்

  1. fTLa. - . -

ஒரு முறை ஸ்ரீமத் ஐயர் (1926) மதுரை சென்றிருந் தார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் படித்துக்கொண்டிருந்த கோதண்ட்ராமன்ச் என்கிற மாணவரைப் பார்த்தார், அவருக்கு வயது 12 இருக்கும். தாய் தகப்பனர் இல்லை: பிரம்மசாரி. அவன்பால் ரீமத் ஐயருக்கு அன்பு சுரந்தது. ‘எனக்கு உதவியாக நீ என்னுடன் வருகிறாயா? உனக்குத் தமிழ் சொல்லித் தருகிறேன். படித்து, நீயும் முன்னுக்கு வரலாம்’ என அவரிடம் பரிவோடு பேசினார். அம்மாணவரும் சம்மதிக்கவே, ஐயரவர்கள் அவரைத் தம்முடன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்; தம் வீட்டிலேயே தம்முடன் தங்க வைத்துக்கொண்டு பாடம் சொல்லித் தந்தார். அவருக்கும், அவரது வீட்டாருக்கும் கோதண்டராமன் மிக்க உதவியாக

இருந்தார். . . . . ஸ்ரீமத் ஐயர் சிதம்பரம் போகும்போது அவரையும் தம்முடன் அழைத்துச் சென்றிருந்தார்; அவரை மீனாட்சி தமிழ்க் கல்லூரியிலும் சேர்த்துவிட்டார்.

சிதம்பரத்திலிருந்து வந்தபோதுதான் அவ்ரது படிப்பு கெடக்கூடாது என அவரைச் சிதம்பரத்திலேயே தங்கி யிருந்து படிக்கச் சொல்லிவிட்டுத் தனியே சென்னைக்கு வந்தார், ஸ்ரீமத் ஐயரவர்கள். .

‘இப்போது இங்கே தமக்கு உதவி செய்யத் துறவி போல் காட்சியளிக்கும் இந்தப் பையனை அண்ணா எங்கிருந்து தேடிப் பிடித்தார்?’ என அறிய ரீமத் சுந்தரேசையருக்கு ஆவல் ஏற்பட்டது போலும்! -

‘யார் அண்ணா, இந்தப் பையன்?’ என அவர் கேட்டார். ...

பிற்காலத்தில் சென்னை விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதராய்ப் பணியாற்றினார்.