பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 . - நாம் அறிந்த கி.வா.ஜ.

‘இந்தப் பையன் தமிழ் படிப்பதற்காக மோகனூரி லிருந்து வந்திருக்கிறான். எல்லாம் இறைவன் திருவருள்: வேறொன்றும் வேண்டாம்; இவனிடம் சுமுகமாக இருந்

தால் போதும்’ என ஐயரவர்கள் நிதானமாகச் சொன்னார்.

“'என்ன் அ ண் ண ா , இடைவெட்டாகப் பேசு

கிறீர்கள்?’ என அவர் ஐயரவர்களிடம் கேட்டார்.

இவர் சென்னைக்கு வந்தவுடன் ரீமத் ஜயரது வீட்டில் தங்கியிருந்த இரண்டு மூன்று நாட்களில் அவ ருடைய குடும்பச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற் கேற்ப நடந்துகொண்டார். - -

தனி ஜாகை - .

பின்னர் அதே தெருவில் ஒரு வீட்டில் ஒர் அறையை மாதம் 4 ரூபாய் வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அங்கே தங்கினார். - -

அந்தக் காலத்தில் மாதத்திற்கு 9 ருபாயில் உணவுச் சாலைகளில் உணவு அளித்தார்கள். -

இவர் காலையில் சிற்றுண்டி அருந்துவார் பகல்’ இரவு உணவு சாப்பிடுவார்.பிற்பகல் சிற்றுண்டி அருந்துவ தில்லை: காப்பி பருகும் பழக்கமும் இல்லை.

தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் நீராடியபின் ஜபம் செய்வார் சிற்றுண்டி அருந்திவிட்டு ஸ்ரீமத் ஐயரது வீட்டிற்குக் காலை 8 மணிக்கெல்லாம் வந்துவிடுவார்.

பிற்பகல் 11 மணிக்கு அங்கிருந்து திரும்பும்போது . உணவு விடுதி சென்று பகல் உணவு அருந்தித் தம் விடுதிக்கு வருவார். - :

திரும்பவும் மால்ை 4 மணிக்கு ரீமத் ஐயரது வீட்டிற்குச் சென்றால் இரவு திரும்ப ஒரொரு நாள் பத்து பத்தரை மணி ஆகிவிடும் வரும்போதே உணவுவிடுதி சென்று சாப்பிட்டுவிட்டுத் தம் விடுதிக்குத் திரும்புவார்: