பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ji I 3 . . நாம் அறிந்த கி.வா.ஜ.

படுத்த உடனே தூக்கம் வராது யாரேனும் உட னிருந்து பாடம் கேட்கவேண்டும். அல்லது எதையாவது வாசிக்க வேண்டும்; அவருக்கு உறக்கம் உண்டுபண் ணும் மருந்து இது - -

ஒரு மணிக்கு எழுந்து சுவடிகளை வகைப்படுத்துவார். செய்தித் தாள்களிலுள்ள முக்கியச் செய்திகளைப் பார்ப் பார்; அல்லது படிக்கச் சொல்லிக் கேட்பார்து

மறுபடியும் தமிழாராய்ச்சி. இரவு 9 மணி வரையில் ஏடு பார்ப்பது, ஒப்பிடுவது முதலிய தமிழ்ப் பணிகள் நடைபெறும். சாயங்காலம் ப்ரூ ஃப்: வரும். அதை ஒப்பு நோக்குதல் முதலியன நடைபெறும். 9 மணிக்குப் பிறகு சாப்பாடு. அதற்கப்பால் உடனிருக்கும் மாணாக்கருக்குப் பாடம் சொல்லுவார். சில தினங்களில் இரவு 11 மணி, 12 மணி வரையில்கூடப் பாடம் சொல்லுவார். படுத்துக் கொண்ட பிறகு கடவுளுக்குப் பாமாலை சூட்டுவார்.

  • அது என்ன?’ என்று நீங்கள் கேட்பீர்கள். கவிச் சக்கரவர்த்தியாகிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர் களுடைய தலை மாணாக்கர் ஐயர் எ ன் ப ைத ச் சற்றே ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ‘ஐயர் செய்யுள் இயற்றுவாரா? ஏதேனும் இயற்றி நூலாக வெளியிட்டிருக் கிறாரா?’ என்று பலர் கேட்டதுண்டு.

‘பழைய செய்யுளைத் திருத்த முற அறிந்தால் போதாதா? நம்முடைய செய்யுள் இல்லாமல் என்ன குறை நேர்ந்துவிட்டது?’ என்று ஸ்ரீமத் ஐயர் சொல்லும் அடக்கமான விடையைக் கேட்டவர்கள், அவர் செய்யுளே இயற்றியதில்லை என்றுகூட நினைக்கக் கூடும்.

இரவு படுக்கையில் படுத்துக்கொண்ட பிறகுதான் அவருக்குத் தனிமை ஒய்வு கிடைக்கும். சிவபெருமானை மனத்தில் தியானித்துக் கொண்டு நூற்றுக்கணக்கான பாடல்களை அப்போது பாடுவார். ஈசுவரத் தியானத்தில் ஒன்றிய மனத்தோடு அப்படியே கண்ணயர்ந்துவிடுவார்.