பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 114

விடியற்காலையில் எழுவதற்குள் சிலமுறை விழித்துக் கொள்வார். சில நாட்களில் நடுநிசியில் எழுந்து விளக்கை ஏற்றிக்கொண்டு நூல் எதையாவது பார்ப்பார்; பாக்கள் புனைவார். அவருடைய ஒரு நாள் நிகழ்ச்சிகள் இவை: பாடம் கேட்கத் தொடங்கியது

ஸ்ரீமத் ஐயரிடம் அன்பர் கி.வா.ஜ. அவர்கள் போய்ச் சேர்ந்த சமயம் ஐயரவர்கள் ப தி ப் பு வேலை ஒன்றையும் தொடங்கவில்லை. ஆத லா ல் பாடம் சொல்வதையன்றி வேறு காரியம் அவருக்கு இல்லை.

இவர் முதலில் அவரிடம் திருவிளையாடற் புராணம் பாடம் கேட்டார். நாள்தோறும் முந்நூறு, நானுாறு பாடல்கள் பாடம் கேட்பார். எத்தனை பாடல்களைப் படித்துப் பாடம் கேட்டாலும் இவருக்கு அலுக்காது.

ரீமத் ஐயரும் இவருக்குப் பாடம் சொல்லுவதில் சிறிதுகூடச் சளைக்கவில்லை. நடுநடுவே, ‘பிள்ளையவர் களைப் போலப் பாடம் சொல்ல இனி யார் பிறக்கப் போகிறார்கள்?’ எனத் தம் ஆசிரியரை நினைந்து ஏங்கு வார். அப்போது அவர் குரல் தழுதழுக்கும். * ,

படிப்பவர்களுக்கு இன்பம் உண்டோ, இல்லையோ பாடம் சொல்வதில் பிள்ளையவர்களுக்கு ஒரு தனி இன்பம் இருந்ததாம். அந்த இன்பம் பிள்ளையவர்களின் மாணாக்கராகிய ஸ்ரீமத் ஐயரிடத்தும் இருந்தது.

பாடல்களைப் படித்துக்கொண்டே வரும்போது இன்ன இடத்தில்தான் இவருக்குச் சந்தேகம் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு அந்த இடத்தை மட்டும் விளக்கும் பேராற்றலும் ஸ்ரீமத் ஐயரிடம் இருந்தது.


.. ஆசானின் மேற்பார்வையில் இவர் தொகுத்த ரீமத் ஐயருடைய பாடல்கள்: தமிழ்ப்பா மஞ்சரி (1,2):

கயற்கண்ணிமாலை - உ.வே.சாமிநாதையர் நூல. நிலையத்தில் காண்க. - - - .