பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 நாம் அறிந்த கி.வா.ஜ.

பாடல்களை இவர் படிக்கும்போது உணர்ச்சியோடு பொருள் விளங்கப் படிப்பது வழக்கம். சுவையும் உணர்ச்சியும் மிகுந்த பாடல்களை ஸ்ரீமத் ஐயர் ஒரு முறைக்கு இருமுறை படிக்கச் சொல்வார். -

அதனைப் படிக்கும்போது இவருடைய கண்களில் நீர் பெருகும் எழுத்துக்கள் தெரியா தம் கண்களைத் துடைத்துக்கொண்டு மேலே படிப்பார். சுவை உணர்ந்து பயிலும் மாணவர்

ஒருநாள் இவர் பழியஞ்சின படலத்தில் சில பாடல் களைப் படித்து வரும்போது இவருக்கு மட்டுமல்ல ஸ்ரீமத் ஐயருடைய கண்களிலும் நீர் வழிந்தது. அங்கவஸ்திரத் தால் அவர் தம் கண்களைத் துடைத்துக்கொண்டபோது, இவர் அவரது முகத்தை நிமிர்ந்து பார்த்தார். அப்போது டிரீமத் ஐயர் சற்றே சிரித்துக்கொண்டே சொன்னார்.

‘நீ பாடல்களைப் பொருளறிந்து, சுவை உணர்ந்து

நன்கு படிக்கிறாய். இது எனக்கு மிகவும் பிடித்திருக் கிறது’ எனப் பாராட்டினார்.

“இப்படி ஆழ்ந்துணர்ந்து படிக்கிறபோதுதான் கல்விமான்களின் மனம் உருகும்; ஒரு சமயம் பிள்ளை பவர்கள் திரிசிரபுரத்தில் இருந்தபோது அவரைக் கான வெளியூரிலிருந்து ஒரு பிரபு வந்தார். பிள்ளையவர்கள் சிதம்பரம் பிள்ளையின் வீட்டு மாடியில் அப்போது இருந்தார்கள். - -

‘அந்தப் பிரபு, பிள்ளையவர்களோடு பேசிக்கொண் டிருந்தார். இரவு உணவு அருந்தியபின் பக்கத்து அறை. யில் போய்ப் படுத்துக்கொண்டார். பிள்ளையவர்களும் படுத்துக்கொண்டார்கள். - i

‘நடு இரவில் விழிப்பு ஏற்படும்போது, எழுந்து உட்கார்ந்துகொண்டு படிப்பது பிள்ளையவர்களின் வழக்கம். அதுபோல அ ன் றும் எழுந்திருந்து ஒரு புராணத்தை எடுத்துப் படித்தார். -