பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 116

“சொற்சுவை, பொருட்சுவை மிக்க பாடல்கள் வந்த போது மனமுருகினார். அவருடைய கண்களில் நீர் தாரைதாரையாக வழிந்தது. தம் ஆடையால் கண் களைத் துடைத்துக்கொண்டார்.

‘அயலூரிலிருந்து வந்த அந்தப் பிரபு ஜன்னல் வழியாக வெளிச்சம் படவே விழித்துக்கொண்டார் போலும். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்திருக்கிறார்)

- “orerrsr அழுது கொண்டிருப்பதுதான் அவருக்குத் தெரிந்தது. பரபரப்புடன் பிள்ளையவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார். அவரது கையில் இருந்த புத்தகத்தை வெடுக்கெனப் பிடுங்கி அப்பால் எறிந்தார்.

‘ஐயா, நடு இரவில் படிப்பதுபோல் கையில் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு ஏன் அழுகிறீர் கள்? நாங்கள் எல்லாம் எதற்கு இருக்கிறோம்? உங்கள் மனத்தை வருத்தும் துன்பம் என்ன? எங்களிடம் சொல்லுங்கள். எதுவாக இரு ந் த ா லு ம் தீர்த்து வைக்கிறோம்’ என்றாராம்! பிள்ளையவர்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. -

‘அருமையான தமிழ்ப் பாடல்களை வாய்விட்டுப் படித்து இன்புறப் பழகாதவர்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகிறது?’ எனச் சொல்லி, “உம். மேலே

படிக்கணும்’ என்றார் ரீமத் ஐயர். -

இப்படிப் பாடம் சொல்லி வரும்போதே தம் ஆசிரியரான பிள்ளையவர்களைப்பற்றி அடிக்கடி நினைத்துப் பல நிகழ்ச்சிகளை ஸ்ரீமத் ஐயர் சொல்லி வந்தார்.

அப்படிச் சொல்லி வந்த சுவையான நிகழ்ச்சிகளைத் தனியே குறித்து வரவேண்டும் என்கிற எண்ணம் இவருக்கு உண்டாயிற்று. -