பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 - நாம் அறிந்த கி.வா.ஜ.கு.

“இருக்கலாம். நமக்கு இப்போது இன்னதுதான்.வேணு மென்று அவருக்கு எப்படித் தெரியும்? தெரிந்தாலும் அவர் அதை நமக்குச் சொல்ல வேண்டுமென்ற கட்டாயம்

என்ன? ’ -

இவ்ரால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.

“யாருமே தாம் சொல்வதை மற்றவர் ஆசையோடு கேட்டுக்கொள்கிறார் எ ன் று உணர்கிறபோதுதான், மேலும் மேலும் தமக்குத் தெரிந்தனவற்றையெல்லாம் ஆசையோடு சொல் விக்கொண்டே போவார். அப்போது தான் அவரிடமுள்ள சரக்குகள் வெளிப்படும். வேண்டியது, வேண்டாதது, சரியானது, தவறானது எல்லாவற்றை யும் நாம் வாரிக்கொண்டால் பிறகு நன்றாக ஆராய்ந்து வேண்டியதை எடுத்துக்கொள்கிறோம், வேண்டாததை ஒதுக்கிவிடலாம். இப்போது தேவைப்படாத செய்தி களுங்கூடப் பிறிதொரு காலத்தில் வேறொரு நூலுக்குத் தேவைப்படக் கூடும். சாஸ்திரிகளிடம் பேசிக்கொண் டிருக்கையில் உம்மால் அவரது உற்சாகம் தடைப்படக் கூடாது என்றுதான் கடிந்துகொண்டேன்.இப்போது ஏன் அப்படிச் சொன்னோம் என்று எனக்கே வருத்தமாக இருக்கிறது’ என ஐயரவர்கள் சொன்னபோது அவரது வேதனையை இவரால் தாங்க முடியவில்லை.

ஆசானின் கொள்கை எவ்வளவு அநுபவபூர்வ மானது என்பதைச் சிந்திக்கத் தொடங்கியபோது அதன் அருமை இவருக்குப் புலப்பட்டது. கூடவே இவரது முகத்தில் பழைய களையும் உற்சாகமும் திரும்ப வந்தன.

உள்ளேயிருந்து, “சாப்பிடலாமா?’ என்று கேட்டுக்கொண்டே வந்தபோது. ‘உம்’ என ஐயரவர்கள் எழுந்தார். ... . . “

தமிழ் அமுதத்தையும், தம் வாழ்வின் அநுபவத்தை யும் ஒருங்கே கூட்டித் தமக்கு விருந்தாகப்படைத்தளிக்கும் ஆசானுடன் இவரும் உண்ணச் சென்றார்.