பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் • . l 34’

என்று வருத்தமாக இருக்கிறது. என்னைத் தாங்கள் மன்னிக்க வேண்டும்’ என்று இவர் சொன்னார்.

நீர் ஏதும் தவறாக நடந்துகொள்ளவில்லை. அவ்விடத்திற்குப் பொருத்தமான செய்தியைத் தான் சொன்னீர்’ என ஸ்ரீமத் ஐயர் சொன்னபோது, “ தாம் சொன்னதை அவர் கவனித்திருக்கிறார்’ என்கிற திருப்தி இவருக்கு உண்டாயிற்று.

நீர் என்னுடன்தானே இருக்கிறீர்? உம்மிடம் கேட்டுக்கொள்ள எனக்கு நிறையச் சந்தர்ப்பம் இருக் கிறது. அங்கு நாம் ராமதாசரிடம் இருக்கும் விஷயங் களைத் தெரிந்துகொள்ளத்தானே போனோம்? மறுபடி யும் அவரைப் பார்க்க நமக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமா? கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அவர் சொல் லும் செய்திகளை எல்லாம் பொறுமையாக இருந்து கேட்டுக்கொள்ள விரும்பினேன்’ என்றார் ஆசான்.

தாங்கள் கேட்டது எதற்கும் அவர் பொருத்தமாக எதுவும் சொல்லவில்லையே! தாங்கள் ஒன்றும் தெரியா தவர் போலல்லவா நினைத்து அவர் பேசிக்கொண்டே போனார்’ என்றார் இவர். கல உமியில் ஓர் அவல் t

ஸ்ரீமத் ஐயரின் முகத்தில் ஒரு மலர்ச்சி பிறந்தது. ‘உமக்கு இன்னும் அநுபவம் போதவில்லை. சிறு வயசு இல்லையா? நானோ கல உமி தின்றால் ஒர் அவல் கிடைக் காதா என்று பார்க்கிறவன். என்னுடைய அநுபவத்தில் மணிக்கணக்காகப் பொறுமையோடு கேட்டுக்கொண் டிருந்தும் ஒன்றும் கிடைக்காமல் போன பல இடங்கள் உண்டு. ஆனால் ராமதாசரிடமிருந்து இன்று பல விஷயங் களைத் தெரிந்துகொண்டேன்’ என ஸ்ரீமத் ஐயர் சொன்னபோது இவருக்குப் பேச நாவ்ெழவில்லை. . ‘நமக்குப் பயன்ப்டக்கூடியது எதையும் அவர் சொன்னதாகத் தெரியவில்லையே?’ என இவர் மென்று