பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.3.3 - நாம் அறிந்த கி. வா. ஜ,

ராமதாசரிடம் இந்த இயல்பு அளவுக்கு அதிகமாக இருந்தது. - - . . .

நம் ஆசான் கேட்ட ச ந் தே க த் தி ற் கு ப் பொருத்தமோ, பொருத்தமில்லையோ ராமதாசர் சரமாரியாகத் தமக்குத் தெரிந்தவற்றையெல்லாம். சொன்னார்.

ஒருவாறு சந்தேகம் தெளியும் படலம் முடிந்தது. நம் ஆசான், ராமதாசரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

வீட்டிற்குப் போனவுடன், ‘வாருங்கள். கைகால் களை அலம்பிக் கொண்டு சாப்பிடப் போகலாம்’ என்று. சர்மா அழைத்தார். - -

ராமதாசரின் வீ ட் டி ல் நடந்த நிகழ்ச்சியால் இவருக்குச் சாப்பாடு வேண்டும்போல் தோன்றவில்லை.

சிறிது நேரம் போகட்டுமே ‘ என ஸ்ரீமத் ஐயரும் சொன்னபோது அவருக்கும் சாப்பாட்டில் விருப்பம் இல்லாமை தெரிந்தது. -

சர்மா இவர்களைத் தனியாகவிட்டுவிட்டு,கொஞ்சம் o உள்ளே போன்ார். இதுதான் சமயம் என்பதுபோல, ஸ்ரீமத் ஐயர் இவரைத் தம் அருகில் அழைத்தார். ஆசானின் இளகிய நெஞ்சம்

‘ர்ாம்தாசர் சொன்னது அனைத்தையும் குறித்துக் கொண்டீரா?’ என்று கேட்டார். - -

இவர், குறித்துக்கொண்டேன்’ என்று சொன்னார்: “அவரது வீட்டில் நான் உம்மைக் கோபித்துக் கொண்டதால் உமக்கு வருத்தம் உண்டாகியிருக்கணும்’ என்றார். -

தங்களுக்குக் கோபம் ஏற்படும்வண்ணம் நான் அவ்விடத்தில் நடந்துகொண்டது தவறுதான். சற்றே அதிகப் பிரசங்கித்தனமாக நடந்துகொண்டுவிட்டோமே.