பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் I 32

ஆசானுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்த வரைப்போல் ராமதாசர் தொடர்ந்து பேசிக்கொண்டே போனது இவருக்குப் பிடிக்கவில்லை. மிக எரிச்சலாக இருந்தது. அதனால் சட்டென்று ராமதாசரின் பேச்சை இடைமறித்து, 3.

‘அருணகிரிநாதர் திருப்புகழில் இதேபோல

ஒன்றஅம் பொன்றுவிழி - கன்ற அங் கம்குழைய

உந்தியென் கின்றமடு விழுவேனை’

எனப் பாடியிருக்கிறார் உந்தி- நாபி என்பதுதான் இடக்கரடக்கல் போலும்’ எனச் சொன்னார். இவரது பேச்சில் அவசரமும், பட்படப்பும் இருந்தன. .

‘தக்கயாகப்பரணி'யின் பாடலுக்கு ஒற்றுமையுள்ள ஒரு பாடலை இவர் அந்தச் சமயம் எடுத்துச் சொன்னது குறித்து, ஆசான் இவரது நினைவாற்றலைப் பாராட்டக்

கூடும் என்றும் இவர் நினைத்தார். . -

மாறாக, நம்ஆசானுக்குச் சட்டென்று கோபம் வந்து விட்டது. இவர் சொன்ன கருத்தை அவர் காதில் வாங்கிக்

கொண்டதாகத் தெரியவில்லை,

‘நீர் என்னுடன்தானே வந்திருக்கிறீர்? உம்மை நான் எதுவும் கேட்டேனா? கொஞ்சம் நீர் எதுவும் பேசாமல் அவர் சொல்வதைக் குறித்துக்கொண்டு வாரும்’ எனக் கடிந்துகொண்டார்.

ஆசானின் கோபத்தைக் கண் ட வு ட ன் இவர் வெலவெலத்துப் போனார். இவரது முகம் வாட்ட முற்றது. அப்புறம் எதுவும் பேசாமல் ராமதாசர் சொன்னவற்றையெல்லாம் குறி த் து க்.ெ கா எண் டே இருந்தார். -- - ஏதாவது ஒரு துறையில் பயிற்சி உள்ளவர்களிடம் பேச ஆரம்பித்தால் திருப்பித் திருப்பித் தமக்குத் த்ெரிந்த வற்றையே அவர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள்;