பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 131 நாம் அறிந்த கி. வ. ஐ.

ஆசான் கேட்டது ச ம் , ந் த மாக ராமதாசர் எதுவும் சொல்லவில்லை. அவர் தமக்குத் தெரிந்த வற்றையெல்லாம். ஏதேதோ சொன்னார்; அவர் சொல்வதையெல்லாம் இவர் குறித்துக்கொண்டே போனார். . -

நம் ஆசான் எளிதில் விளங்கக் கூடிய ஒரு பகுதியைக் கேட்டபோதுகூட அதற்கு ராமதாசர் நேராக விளக்கம் சொல்லவில்லை. தமக்குத் தெரிந்த தந்திர சாஸ்திரங் களிலிருந்து பலவற்றைச் சொல்வி அதற்கும் இதற்கும் முடிச்சுப் போட்டார், இவருடைய உள்ளத்தில் கோபம் புழுங்கியது. .

தக்கயாகப்பரணி"யில், உதர சோபிதா நாபி கமல. வாயினால் மீள உமிழும் நீலி என ஒரிடம் வருகிறது.

‘'தேவி அகில உலகங்களையும் தன் வயிற்றுக்குள் இட்டு மீட்டும் நாபி கமலவாயினால் உமிழ்கிறாள்’ எனப் பொருள், இப்பாட்டு இடக்கரடக்கல் என உரையாசிரியர் எழுதியிருக்கிறார். . . செர்ன்னால் பச்சையாக இருப்பவற்றை இடக்கர்” என்பார்கள். அவற்றை மறைத்துப் பேசும் இடத்தை “இடக்கரடக்கல்’ என்று இலக்கணக்காரர் கூறுவர்.

இந்தப் பாட்டிலுள்ள ரகசியக் குறிப்பு என்னவென்று நம் ஆசான் ராமதாசரிடம் கேட்டார். . . . . . . . .

இதற்குக் கொஞ் சங் கூட ச் சம்பந்தமில்லாமல் ராமதாசர் எதையோ சொல்லிக்கொண்டு போனார். நம் ஆசானோ, அப்படியா? அப்படிய்ா?’ என்று ராமதாசர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருந்தார். நடுநடுவே மிக நன்றாக இருக்கிறதே! என நம் ஆசான் சொல்வதைக் கேட்டு ராமதாசர் பின்னும் உற்சாகத் துடன் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போனார்.

ஆசானிடம் கி.வா.ஜ வந்து சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந்தன. ஆசானின் இயல்பை இவர் முற்றும் அறிந்திருக்கவில்லை. -