பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் I 3 0.

ராமதாச சாஸ்திரிகள். ராமதாசர் வடமொழியிலும், மந்திர சாஸ்திரத்திலும் வல்லவர் என்று சர்மா பல சந்தர்ப்பங்களில் சொல்வியிருக்கிறார். எனினும், ராமதாசரை நம் ஆசான் பார்த்ததில்லை;

ஒரு முறை பங்களூரில் இருக்கும்போது ராமதாசரை. ஒரு நாள் சந்தித்துப் பேசவேண்டும், ‘தக்கயாகப்பரணி” யில் தமக்குத் தெளிவு ஏற்படாத இடத்தை அவரிடம் சொல்லி அவரது விளக்கத்தைக்கேட்டு வரவேண்டுமென நினைத்தார் நம் ஆசான். -

அதனால் பங்களுர் போனபோது தக்கயாகப்பரணி, கையெழுத்துப் பிரதியைத் தம்முடன் எடுத்துக்கொண்டு இவரையும் அழைத்துச் சென்றார்.

ஒரு நாள் இவர்கள் ராமதாசரின் வீட்டிற்குச் சென்றார்கள். ராமதாசரைக் கண்டவுடன் நம் ஆசான் கீழே விழுந்து அவரை வணங்கினார். இவரும். அவருக்குச் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துகொண்டார்.

எல்லோரும் அமர்ந்தார்கள். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டனர்.

நம் ஆசான், ராமதாசரிடம் தாம் வ ந் த காரியத்தைத் தெரிவித்தார்; தக்கயாகப்பரணி"யில் தேவியைப்பற்றி வரும் செய்திகளை எ டு த் து ச் சொன்னார் -

தமிழில்கூட ஸ்ரீவித்யா சம்பந்தமான செய்திகள் உள்ளனவா” எனச் சாஸ்திரிகள் வியந்தார்.

“ உ ங் களு க் கு எந்த இடம் விளங்கவில்லை, சொல்லுங்கள்’ என்றார். - - -

நம் ஆசான் இவரிடம் இரண்டோர் இடத்தைச் சுட்டிக் காட்டி அவற்றைப் படி க்க ச் சொன்னார். அவற்றில் தமக்குள்ள சந்தேகங்களை ராமதாசரிடம் கேட்டார்; . . “ ; ,