பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 நாம் அறிந்த கி.வா.ஜ.

அப்படியே எழுதி வருவார். நேரம் போவதே இரண்டு பேருக்கும் தெரியாது. - -

சீரும் சிறப்பும் உடையோய், இருமொழிச் செல்வ நின்றன், பேரும் தெரிந்திலன் என்செய்குவேன், இந்தப் பேதையேனே’ என்று ஆசான் சொல்லும்போது, அவர் * தக்கயாகப் பரணி"யை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார் என்கிற குறிப்பினை இவர் புரிந்துகொள்ள லானார். உ ட ேன ஆசானிடம் தக்கயாகப்பரணி” நூலையும் அது சம்பந்தமான குறிப்புகளையும் எடுத்துக் கொடுப்பார்.

அந்நூலுக்குப் பழைய உரை ஒன்று இருந்தது. உரையாசிரியரைப்பற்றிய விவரம் ஏதும் தெரியவில்லை: அந்த உரையின் சிறப்பையும், அதில் தெரிவிக்கப் பெற்றிருந்த பல நுட்பமான செய்திகளையும் கவனிக்கும் போதெல்லாம் உரையாசிரியர்ைப் பாராட்டுவார், ‘அவர் தமிழ், வடமொழி ஆகிய இரண்டிலும் நல்ல புலமையுடையவராக இருந்திருக்க வேண்டும்’ என எண்ணினார். அவர் இன்னார்’ என்று தெரியாத மனவேதனையில் நம் ஆசான் பாடிய பாடல்தான் அது - o - -

இவர்கள் தக்கயாகப்பரணி நூல் ஆராய்ச்சியை எடுத்துக்கொண்ட நேரம் ஆசானுக்குப் பங்களுர் போக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவர் மைசூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடக் குழுவில் ஒர் உறுப்பின ராக இருந்தார். அக்குழுவின் கூட்டம் பங்களுரில் நடை பெறும். அதற்கு அவர் யாரையேனும் உடன் அழைத்துக் கொண்டு போய்வருவது வழக்கம். - ஆராய்ச்சியில் தெளிவை நாட்டிய ஆசான்

பங்களுர் போனால் தமக்கு வேண்டிய சுப்பிரமணிய

சர்மா என்பவரது வீட்டில் தங்குவார். சுப்பிரமணிய சர்மா தேவி உபாசகர், அவருடைய குருவின் பெயர்