பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 128

அகப்பொருள் போன்ற இலக்கண நூல்களைப் பாடம் சொன்னார். -

அப்போது திரு வி. மு. சுப்பிரமணிய ஐயர் நம் ஆசானின் இல்லத்திற்கு அடிக்கடி வந்து உதவி வந்தார்: அவர் திருமணமானவர். வித்துவான் தேர்வுக்காக நம் ஆசானிடம் பாடம் கேட்டு வந்தார். !

ஐயரவர்கள். வி. மு. சு-வுக்குப் பாடம் சொல்லும் போது இவரும் அவருடன் சேர்ந்து பாடம் கேட்டு வந்தார். . - s

“காற்றுள்ளபோதே துாற்றிக்கொள்’ என்பதற். கேற்ப நம் ஆசானிடம் பாடம் கேட்கக் கிடைத்த சந்தர்ப்பம் அனைத்தையும் இவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

  • தக்கயாகப்பரணி பதிப்பில் காட்டம்

தக்கயாகப் பரணி ஒட்டக்கூத்தரால் இயற்றப் பெற்றது. அம்பிகை சம்பந்தமாகப் பல செய்திகள் அந்த நூலில் உள்ளன. நம் ஆசான் ஏற்கனவே சென்னையில் இருந்த சீனிவாசநல்லூர் ராமசந்திர சாஸ்திரிகள் போன்ற வடமொழிப் புலவர்களிடம் சென்று அவற்றுக் கெல்லாம் விளக்கம் பெற்றிருந்தார். எனினும் அவருக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை.

இப்போது திரும்பவும் அந்த நூலை ஆராய்ந்து அச்சுக்குக் கொடுக்கலாம் என அவர் நினைந்தார்.

இவருக்குத் தினமும் பாடம் சொன்னவுடன் தக்க யாகப் பரணி"யை எடுத்துக்கொள்வார். நூல் சிறியது தான்; இருந்தாலும் ஆராய்ச்சிக் குறிப்பு ஒன்றைச் சிறப்பாக எழுத எண்ணினார். அது பற்றிய குறிப்புகளை ஒவ்வொன்றாக அவர் சொல்வார். இவர் அதனை

23-5-27 வி.மு.க-வின் திருமணம் விஷ்ணம் பேட்டையில் நடந்தது.