பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 - . நாம் அறிந்த கி.வா.ஜ.

ஜார்ஜ் வாஷிங்டன், ஜோசஃப் ஸ்டாலின் போன்ற மகா வீரர்களின் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் எவ்வளவோ உதவி செய்திருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறோம். இதிலிருந்து ஆண்டவன் அவ்வளவு பாரபட்சமுள்ளவர் என்று முடிவு கட்டுதல் தவறாகும். சரித்திரத்தில் புகழ் பெற்ற மகான்களையும், வீரர்களையும் தவிர இன்னும் எத்தனையோ பேருக்கும் ஆண்டவன் சந்தர்ப்பங்களைத் தந்துகொண்டுதான் இருக்கிறார். - -

ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வது மனிதனுடைய சமயோசித அறிவையும், சரியான சமயத்தில் சரியான முடிவு செய்யும் ஆற்றலை யும் பொறுத்தது. சந்தர்ப்பங்களைக் கைநழுவ விடுகிற வர் கோடானுகோடிப் பேர்; பெயரும் புகழும் இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து உலகைவிட்டுச் செல் கிறார்கள். சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் வரலாற்றில் தங்கள் பெயரை நிலை நாட்டிவிட்டுச் செல்கிறார்கள்.*

ஐயரவர்கள் தரனை.நினைக்க நெஞ்சம் என்பதாக ஈற்றடி கொடுத்து இவரைப் பாடச் சொன்ன சந்தர்ப்பம் இவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும். இவர் அந்தச் சந்தர்ப்பத்தை தழுவவிடாமல் பற்றிக்கொண்டார்.

இவரது கவிதா ச க் தி ஐயரவர்களுக்கு இவர் பால்’ பேரன்பை ஏற்படுத்தியது. இவர் துணைகொண்டு மேலும் பல தமிழ் நூல்களைத் தம்மால் பதிப்பிக்க முடியும் என்கிற நம்பிக்கையும் அவருக்குப் பிறந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை அவர் நழுவவிடத் தயாராயில்லை.

ஐயரவர்கள் இவருக்குத் திருவிளையாடற் புராணத் தைத் தொடர்ந்து வேறு சில புராணங்கள் பாடம் சொன்னார். பிள்ளைத் தமிழ், உலாக்கள் போன்ற - வற்றைப் பாடம் சொன்னார். நன்னூல், இறையனார்

  • பொன்னியின் ெ