பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத் தில் &”

ஸ்ரீமத் ஐயரது உற்சாகத்தைக் கண்டு. இவர் மேலும் ஊக்கம் கொண்டவராகத் தாம் ஏற்கனவே சொந்தமாக எழுதியிருந்த சில பாடல்களைச் சொன்னார்.

ஸ்ரீமத் ஐயர் அவற்றையும் கேட்டு மகிழ்ந்ததோடு, ‘தெய்வபக்தி இல்லாவிட்டால் கவிதை வராது. உமக்குச். சரஸ்வதி கடாட்சம் பூரணமாக அமைந்திருக்கிறது: நிறைய எழுதும்’ என்று இவரைப் பாராட்டி ஆசீர் வதித்தார்.

தக்க வாய்ப்பும் எதிர்காலமும்

‘சந்தர்ப்பம் என்பது கடவுளுக்கு ஒரு புனைபெயர்” என்பதாகத் தற்கால அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். கடவுள் தாம் செய்யும் காரியத்தைத் தாம் செய்தது. என்று, காட்டிக்கொள்ள விரும்பாதபோது சந்தர்ப்பம் என்ற புனைபெயரைச் சூட்டிக்கொள்கிறாராம், உலக வரலாற்றில் மிகப் பிரசித்தி பெற்ற வீரர்கள், அரும் பெருங் காரியங்களைச் சாதித்த மகான்கள் இவர் களுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது சந்தர்ப்பம் அவர்களுக்கு மிக்க உதவி செய்திருக்கிறது. என்பதை அறியலாம். அவர்களிடம் கடவுள் தனியொரு கருணை காட்டி, அத்தகைய சந்தர்ப்பங்களை அமைப்ப தாகச் சிலர் கூறுவர். அவரவர்கள் பிறந்த வேளையின் மகிமை, ஜாதகத்தின் பலன், பிரம்மா. எழுதிய எழுத்துக பூர்வஜன்ம சுகிர்தம் என்றெல்லாம் வாழ்க்கையில் ஏற்படும் அதுகூலமான சந்தர்ப்பங்களுக்குக் காரணங்கள் கற்பிப்போரும் உண்டு. : . - .

நம் காலத்தில் காந்தி மகான் தென்னாப்பிரிக்கா போவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படாதிருந்தால் அவர் மனித குல சிரேஷ்டர் என்றும், அவதார புருஷர் என்றும் மக்களால் பேர்ற்றப்படும் நிலையை அடைந்திருக்க முடியுமா? - - ; :

சந்திரகுப்தன், விக்கிரமாதித்தன், ஜூலியஸ் சீஸர், . நெப்போலியன், ட்யூக் அஃப் வெல்லிங்டன் (Wellington)