பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Y25 - நாம் அறிந்த கி.வா.ஜ5

‘இப்போதே பாடினதா?’ என அவர் கேட்டார். “ஆம்” என்று இவர் சொன்னவுடன் வியப்பால் அவர, முகம் மலர்ந்தது. . .

பேஷ்! நன்றாகப் பாடியிருக்கிறாயே! திருவிளை பாடற் புராணம் படித்துக்கொண்டிருக்கிறாய். அந்த நினைவு இருக்கிறதா என்று பார்க்கத்தான் ஈற்றடியைக் கொடுத்தேன். தரனை என்ற அரை வார்த்தையை முன் அடியோடு ஒட்டி வரும்படி நன்றாகப் பாடியிருக்கிறாய்’ எனப் பாராட்டினார். -

‘உனக்கு, முன்பே செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டா?’ என்றும் கேட்டார்.

‘உண்டு!” என இவர் தம் தலையை அசைத்தார்) தமக்குப் பாடல் இயற்றத் தெரியும் என்பதை முன்பே ஸ்ரீமத் ஐயரிடம் சொல்ல இவருக்கு வாய்ப்பு ஏற்பட

வில்லை. -

‘நேற்று நான் உமக்குச் சாகித்தியம் வருமா என்று கேட்டதற்கு, தெரியாது’ என்று சொன்னீரே!’ என

ஸ்ரீமத் ஐயர் கேட்டார்.

‘எனக்குப் பாட வராது. அதனால் நீங்கள் சாகித் தியம் வருமா என்று கேட்டபோது'சாகித்தியம்’ என்றால் “சங்கீதம்’ எனக் கருதிக்கொண்டு சொல்லிவிட்டேன்’ என இவர் சொன்னார். -

“அப்படியா?” என ரீமத் ஐயர் சொல்லிச் சிரித்துக் கொண்டார். - . . - .

‘சங்கீத உருப்படிகளைச் சாகித்தியம் என்றும், சித்தனைகளை இயற்றும் ஆசிரியர்களைச் சாகித்திய கர்த்தா என்றும் சொல்லும் வழக்கு வந்துவிட்டது; சாகித்தியம் என்பது கவிதைக்குப் பெயர். சாகித்திய சக்தி என்றால் கவிதா சக்தி’ என்று பொருள்’ என விளக்கினார் ஐயரவர்கள்.