பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 139 - நாம் அறிந்த கி.வா.ஜ}

அவ்வளவையும் ஒழுங்குபடுத்தி, ஒருமுகப்பட்ட சிந்தையோடு ஐயரவர்கள் பார்த்து வந்தார்; இவரையும்

பார்க்கச் செய்தார். - -

இவருக்குப் பாடம் சொன்னவுடன், அந்தக் குறிப்பு களை வைத்துக்கொண்டு கொஞ்சங் கொஞ்சமாகப் பிள்ளையவர்களின் வரலாற்றைச் சொல்வார். ஐயரவர் கள் சொல்வதை இவர் அ ப் ப டி ேய எழுதுவார்) இவர் எழுதியதைத் திரும்பப் படிக்கச் சொல்வார் அவர். நடுநடுவே சிலவற்றை நீ க் கி வி ட ச் சொல்வார்; சிலவற்றைச் சேர்த்துக்கொள்ளச் சொல்வதும் உண்டு. இவர் வேறு வேலையாக இருக்கும்போது மற்றவர்களிடம் சொல்லியும் எழுதுவிப்பார்.

ஐயரவர்கள் தம் 16-ஆம் பிராயத்தில் (1870-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்) பிள்ளையவர்களிடம் மாணவ ராகச் சேர்ந்தார்; அதுமுதல் அந்தக் கவிஞர்கோமானின் இறுதிக் காலம்வரையில் கூடவே இருந்து பாடம் கேட்டு வந்தார். . . .

தமிழ்ப் பாடம் சொல்வதற்கேற்ற தமிழறிவையும், பாடம் சொல்லும் திறமையையும், கவி பாடும் ஆற்றலை யும் ஐ ய ர வ ர் க. ள் பிள்ளையவர்களிடமே கற்றுக் கொண்டார். - -

மகாவித்துவான் பி ள் ைள ய வ ர் க ள் 1815-ஆம் ஆண்டு முதல் 1876-ஆம் ஆண்டு வரையில் இவ்வுலகில் வாழ்ந்திருந்தார்கள். -

பிள்ளையவர்களின் இளமைக் கால வரலாற்றை எழுதும்போது, ‘மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு ஐந்து பிராயமானவுடன் சிதம்பரம் பிள்ளை தம் குமாரனுக்கு வித்தியாரம்பம் செய்வித்துத் தம் பள்ளிக்கூடத்திலேயே கல்வி பயிற்றத் தொடங்கினார்’ என்று எழுதினார்.

பிள்ளையவர்களின் பெயரை எழுதியவுடன் ஏதோ தாம் பெரிய தவறு. ஒன்றை அந்த இடத்தில் தவிர்க்க