பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் . . ; 14 Go

முடியாமல் செய்துவிட்டதைப்போல வருந்தினார். ஐயரவர்கள்; உடனே, “பிள்ளையவர்களை இவ்வாறு பெயர் குறித்து எழுதுவதற்கு அஞ்சுகிறேன்’ என அப்பக்கத்தின் அடியில் குறிப்பு ஒன்றை எழுதச் சொன்னார். ஐயரவர்கள் தம் ஆசிரியரைப்ப்ற்றி ஓர் அடையுமின்றி மீனாட்சிசுந்தரம் பி ள் ைள என்று எழுதியது அந்த ஒரே முறைதான்.

பிள்ளையவர்களிடம் ஐயரவர்கள் கல்வி பயின்றது. ஆறே ஆண்டுக்கால ந்தான் என்றாலும் தம் ஆசிரியப் பிரானிடம் ஐயரவர்கள் கொண்டிருந்த குருபக்தி இவரால் ஆழம் காண முடியாததாக இருந்தது.

ஐயரவர்கள் பிள்ளையவர்களை, “மகாவித்துவான், கவிஞர்பிரான், கவிஞர் சிகாமணி, புலவர் பெருமான்’ என்று அடைமொழி கொடுத்துச் சொல்லும்போது இவருக்குச் சிலிர்ப்பு உண்டாகும். அவர், பிள்ளையவர் கள் என்பதைத் தவிர, தம் ஆசிரியப்பிரானின் பெயரைச் சொல்லி இவர் கேட்டதில்லை. -

திருவாவடுதுறை ஆதீனம்பற்றிய கினைவுகள்

ஒரு நாள் பிற்பகல் பிள்ளையவர்களின் வரலாற்றை இவர்கள் எழுதிக்கொண்டிருந்தபோது ஆவடுதுறையி’ லிருந்து ஒரு கடிதம் வந்தது.

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத் தின் குரு மகாசந்நிதானமாக அப்போது ஸ்ரீல பூர் வைத்தியலிங்க தேசிகர். இருந்தார்: . . “ மாயூரநாதர் கோவில் குடமுழுக்கு அழைப்பிதழைத் தங்களைக் கலந்துகொண்டு சிறப்பாக எழுத விரும்பு கிறோம் என அவர் ஐயரவர்களுக்கு எழுதியிருந்தார்.

தேசிகரிடமிருந்து வந்த கடிதத்தைப் பார்த்தவுடன் ஐயரவர்களுக்குத் தம் இளமைக்கால நினைவுகள் வந்து விட்டன. அவரது முகம் பிரகாசம் அடைந்தது.

ருவாவடுதுறை போய்வரத் தீர்மானித்தார்.