பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:14 l - நாம் அறிந்த கி.வா.ஜ3

“நீர் திருவாவடுதுறைக்குப் போனதில்லை அல்லவா? இப்போது என்னுடன் வரவேண்டும். நீர் எனக்கு உதவி யாக இருந்துகொண்டு, தமிழ் படித்து வருவதை அறிந் தால் தேசிகர் உம்மிடம் மிகவும் மகிழ்ச்சி கொள்வார்; நான் அந்த மடத்தில் தங்கியிருந்துகொண்டு பிள்ளை யவர்களிடம் பாடம் கேட்ட இடங்களை எல்லாம் நீரும் பார்க்கலாம்’ என ஐயரவர்கள் மகிழ்ச்சியோடு சொன்ன போது இவருக்கும் அளவிட முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது: - - - r

திருவாவடுதுறை பாடல்பெற்ற தலம். மாயூரத்திற்கு மேற்கே பத்துமைல் துாரத்திலுள்ள நரசிங்கன்பேட்டை ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கிக் கிழக்கே ஒன்றரை மைல் தூரம் சென்றால் அத்தலத்தை அடையலாம்.

அத்தலத்தில் தங்கித்தான் திருமூலர் சிவயோகம் புரிந்து திருமந்திரம்’ என்னும் அருமையான நூலைச் செய்தருளினார், - - .

ஆயிரம் கொடுப்பர் பேர்லும் ஆவடுதுறை அரசனே” என வாகீசர் பாடிய ரீகோமுத்தீசுவரர் ஆலயம் அத்தலத்தில் உள்ளது.இப்படி நாவுக்கரசர் பாடியதற்குக் காரணமும் உண்டு:

சோழ்நாட்டுத் தலங்களையெல்லாம் தரிசனம் செய்துகொண்டு வந்த ஞானசம்பந்தப் பெ ரு மான் திருவாவடுதுறைக்கு வந்தார். நவகோடி சித்தர்கள் வாழ்ந்த அத்திருப்பதியில் சில காலம் தங்கினார்.

இறைவனது அருளைத் தவிரப் பொருள் ஏதும் இறைவனிடம் வேண்டத் தெரியாத சம்பந்தரிடம் அவருடைய தந்தையார், ‘எனக்குப் பணம் வேண்டும்’ என்று கேட்டார்; அவருக்கு வேள்வி புரியவேண்டுமென்ற ஆசை எழுந்ததே காரணம்: . . . -

‘இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்’ என நெஞ்சுருக இறைவன்