பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 142

...முன் பாடத் தொடங்கி, ‘இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல், அதுவோ உனது இன்னருள், ஆவடுதுறை அரசனே என்கிற குறிப்போடு சம்பந்தர் பதிகம் இயற்றினார்.

இறைவன், எடுக்க எடுக்கக் குறையாத ஆயிரம் பொன்னுள்ள கிழியைச் சம்பந்தருக்கு இத்தலத்தில்தான் வழங்கியருளினார். - இத்தலத்திலே சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்ன” t அருளாளர் பூர் நமச்சிவாயமூர்த்திகளால் நிறுவப்பெற்ற சைவ மடந்தான் திருவாவடுதுறை ஆதீனம்:

ஐயரவர்களுடன் இத்தலத்திற்குத் தாமும் போய் வந்தால் தம் தாய் தந்தையரின் எதிர்பார்ப்பை நிறை வேற்ற இறைவனது அருள் கிடைக்கக்கூடும் என இவரும் நினைந்து மகிழ்ந்திருந்தார்.

இவர்கள் அந்த மாதக் கடைசியில் ஆவடுதுறை * போவதாக இருந்தது. அதற்கு இரண்டு நாட்கள் முன்ன தாக ஐயரவர்களுடைய தம்பியின் துணைவியார் கால மானார். அதனால் ஐயரவர்களுக்குக் கடைசி நேரத்தில் மடத்திற்குப் போக முடியாத நிலை ஏற்பட்டது.

மடத்திற்குத் தாம் வருவதாக முன்கூட்டியே தகவல் தந்துவிட்டதால் யாருமே போகாமல் இருப்பது சரியல்ல, தேசிகளின் கருத்துகளை அறிந்துவர இவரைமட்டுமேனும் அனுப்பலாம் என ஐயரவர்கள் எண்ணினார்.

ஆசானின் அறிவுரை -

பெரிய இடத்தில் பழகும்போது அவ்விடத்துப் பழக்க வழக்கங்களை அதுசரித்து நடந்துகொள்ள வேண்டும். அவ்விடத்தில் இவர் சரியாக நடந்து கொள்ளாவிட்டால் ஏதேனும் கெட்ட பெயர் நமக்குத் ான் வந்துசேரும் என ஐயரவர்களின் புதல்வர் ஞ்சினார். .