பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 143 நாம் அறிந்த கி.வா.ஜ.

தம் புதல்வர் சொல்வது ஒரு வகையில் நியாய மாகவே ஐயரவர்களுக்குத் தோன்றியது. எதிர்பாராத வகையில் ஒரு சமயம், தமக்கு அவ்வூரில் ஏற்பட்ட சங்கடம் ஒன்று அவர் நினைவுக்கு வந்தது:

ஐயரவர்கள் தமிழ் படிக்கப் பிள்ளையவர்களிடம் போய்ச் சேர்ந்தபோது பிள்ளைவர்கள் மாயூரத்தில் இருந்தார்கள். -

ஆவ்டுதுறை மடத்தில் இருந்த தம்பிரான்களுக்கும் பிள்ளையவர்களிடம் பாட ம் கேட்கவேண்டுமென்ற ஆசை இருந்து வந்தது. - அதனால் பிள்ளையவர்களை திருவாவடுதுறை மடத் திற்கே வந்திருந்து பாடம் சொல்லுமாறு சந்நிதானம் கட்டளையிட்டது. அதன்படி பிள்ளையவர்கள் திருவா வ டு து ைற க் கு ச் சென்றார். கூடவே ஐயரையும் அழைத்துச் சென்றார். -

அங்கே போன பின் ஐயரவர்கள் சில மாதங்கள் குமாரசாமித் தம்பிரானும், பன்னிருகைத் தம்பிரானும் தங்கியிருந்த சவுக்கண்டியில் தங்க நேரிட்டது. காணாமற் போன கண்டிகை

ஒரு நாள் பன்னிருகைத் தம்பிரானது ஏறுமுக ருத்தி ராட்சக் கண்டிகை காணவில்லை. தங்க முகப்புகளுடன் கல் இழைத்த விலை உயர்ந்த கண்டிகை அது. அன்று அனைவரும் அதைத் தேடினார்கள். அகப்படவில்லை.

அன்று இரவு வழக்கம்போல் தம்பிரான்கள் இருத்த சவுக்கண்டியில் ஐயரவர்கள் சற்றுக் கண்ணயர்ந்திருப் பார்; அப்போது, மடத்தில் நடந்த களவைப்பற்றித் தம்பிரான்களோடு யாரோ இப்படிப் பேசுவது காதில் விழுந்தது: “மடத்திலேயே களவு நடந்ததென்றால் ஆதீனத்திற்கே கெட்ட பெயர்: - J

“ஆமாம். சந்நிதானத்திற்கும் தெரிந்துவிட்டது. அது கிடைக்கவில்லையென்றால் அவமானந்தான்.'