பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 144

அது எங்கே பேர்கும்? இங்குள்ள பழம்பெருச்சாளி கள் வேலையாகத்தான் இருக்கும், எல்லோரையும் கட்டி வைத்து உதைத்து விசாரித்தால் கிடைக்காமலா போகும்?” - - - .

‘அப்படி விசாரிப்பது என்றால் இங்கே வந்திருக்கும் புதிய மனிதர்களையும் விசாரிக்கத்தான் வேண்டும்.’’

“யாரையா புதிய மனிதர்?’’ - - ‘பிள்ளையோடு வந்திருக்கும் ஐயர் வீட்டுப் பிள்ளை புதிய மனிதர்தானே? அவர் எடுத்திருக்கக் கூடாதா?’இந்தக் குரல் யாருடையது என்று ஐயரவர்களுக்குத் தெரியவில்லை. . -

சொரேல்’ என ஐயரின் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சி னாற்போல இருந்தது. அவரது உடம்பெல்லாம் நடுங்கி யது. திருட்டுப் பட்டம் வாங்கிக்கொள்ளவா படிப்பதற் காக என்று இங்கு வந்தோம் என ஒரு கணம் துடி துடித்துப் போனார். - -

அந்த வார்த்தையை மறுபடியும் சொல்லாதே! பாவி என ஏறுமுகக் ருத்திராட்சக் கண்டிகையைத் தொலை யவிட்ட தம்பிரானே கத்தினார். -

ஐயர்மீது ஐயமுற்று பரம் சாதுவாகிய அவரைச் சொன்னால் உமது நாக்கு அழுகித்தான் போகும்’ என ஒதுவார் சபித்ததும் காதில் விழுந்தது. -

தம்மீது குற்றம் சாட்டினால் அதை நம்பாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து ஐயரவர்கள் கொஞ்சம் ஆறுதல் பெற்றார். என்றாலும், அப்புறம் அன்று இர அவருக்குத் தூக்கமே வரவில்லை. . *

விநாயகப் பெருமானே, நீதான் என்மீது ஏற்பட்ட அபவாதத்தை முற்றும் நீக்க வேண்டும் என வேண்டிக்

கொண்டிருந்தார்.

மறு நாள் குளத்துப் படித்துறை விநாயகருக்குப் பின்

த, மாடம் ஒன்றில் கண்டிகை அகப்பட்டது.1