பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 - நாம் அறிந்த கி. T

o, பன்னிருகைத் தம்பிரான் குளிக்கப் போனபோது அவரே அங்கு அதை யார் கண்ணிலும் படக்கூடாது என்று வைத்திருக்கிறார்: வைத்த இடத்தை அவர் மறந்த தால் இந்தச் சங்கடம் உண்டாயிற்று. .

அந்தச் செய்தியை ஐயரவர்கள் கேட்டவுடனே குளக்கரை விநாயக்ர் சந்நிதிக்குப் போய்த் தோப்புக் கரணம் போட்டு வந்தார். - - -

* x

ஐயரவர்கள் அந்த நிகழ்ச்சியை இவரிடம் சொன்ன தோடு, ‘அங்கே போனால் நீங்கள் அங்குமிங்கும் அலையக் கூடாது. அவர்கள் தங்கச் சொன்ன இடத்தில் இருக்க வேண்டும். கூப்பிட்டு அனுப்பும் போதுதான் தேசிகரைப் பார்க்க உள்ளே பேர்கவேண்டும்’ என்றார்.

“ஸ்ரீலg ஞானாசிரியரிடம் பேசும்போது அவர் வார்த்தையை மறிக்கக் கூடாது. அவர் ஏதாவது கேட்டால் அவரது நோக்கத்தை அறிந்து கணிரெனப் பதில் சொல்ல வேண்டும். மனத்தில் தோன்றுவனவற்றை எல்லாம் சொல்லிவிடக் கூடாது. இங்கிதம் அறிந்து பேசி அவரது கருத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவரது கருத்தை அப்போதைக்கப்போது குறித்துக்கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் பல அறிவுரை சொல்லி இவரைத் தனியே மடத்திற்கு அனுப்பி வைத்தார். இவரிடம் என்னவோ அவருக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது. - - .

இவரும் தனியே திருவாவடுதுறை சென்று, தேசிகரது கருத்துக்களைத் தெரிந்துகொண்டு மறு நாளே வந்து விட்டார்; -

வந்தவுடன் ஐயரவர்களிடம், ‘இவ்விடத்து உடல் நலத்தைப்பற்றித் தேசிகர் மிகவும் பரிவோடு விசாரித்