பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 146

தார். மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேகப் பத்திரி கையை இன்னவாறு எழுத வேண்டுமெனத் தேசிகர் இவ்விடத்தில் தெரிவிக்கச் சொன்னார். அவரோடு பேசும் போது அவரது தமிழார்வம் நன்கு வெளிப்பட்டது. அவர் இவ்விடத்தில் கொண்டுள்ள மதிப்பும், மரியாதையும் அளவிடற் கரியவை'’ என அங்கு நடந்தவற்றைச் சொன்னபோது ஐயரவர்கள் பெரிய சங்கடம் ஒன்றி. லிருந்து விடுபட்டவரைப்போல மி க வு ம் மகிழ்ந்து போனார். -

ஆசான் மாணவரிடம் கொண்ட பேரன்பு - ‘எனக்குத் தள்ளாமை வந்துவிட்ட நேரத்தில் எனக்குத் துணையாக இருக்க இறைவன்தான் உம்மை என்பால் அனுப்பியிருக்கிறான். நீர் நன்றாக இருப்பீராக தேசிகர் சொன்னபடி நீரே மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேகப் பத்திரிகையை எழுதவேண்டும். நான் பார்த்துத் திருத்தித் தருகிறேன்’ என ஐயரவர்கள் சொன்னார். அவருடைய கண்களில் நீர் துளித்தது.

அப்பணியை ஐயரவர்கள் தமக்கு வழங்கிய பெரும் பேறாக இவர் கருதினார்.

இவரிடத்தில் ஐயரவர்களுக்கு நாளுக்கு நாள் அன்பு பெருகி வந்தது. - -

தாம் தினமும் தேவார பாராயணம் செய்யும்போது கூட இடையிடையே அத்திருப்பாடல்களின் நயத்தை இவருக்கு எடுத்துச் சொல்வார்; தலங்களின் பெருமையை விளக்குவார். மற்ற நூல்களைப் பாடம் சொல்லி வரும் போது திருமுறைகளிலிருந்தும் ஒப்புமை காட்டுவார். திருமுறைகளில் ஈடுபட்டு உருகும் அன்பும், அவற்றி லுள்ள பாட்டின் நயங்களையும் நுட்பங்களையும் கண்டு இன்புறும் புலமையும் அவரிடமிருந்தே இவர் பெற்றார்: இவர் ஒரு நாள் சிறிது தாமதமாக ஐயரவர்களின் க்குப் போனாலும் “ இன்னும் ஜகந்நாதன்