பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

147 -- நாம் அறிந்த கி.வா.ஜ.

வரவில்லையா?’ என வீட்டில் உள்ளவர்களை ஐயர் அடிக்கடி கேட்கத் தொடங்கிவிடுவார்.இவரை அழைத்து

வர யாரையாவது அனுப்பிவைப்பார் ஐயரவர்கள்.

தமிழறிஞர்களை அறிமுகப்படுத்திய ஆசான்

தம்மைப் பார்க்க வருகிற தமிழ் அறிஞர்களிடம் எல்லாம் இவரை அறிமுகப்படுத்தி வைத்தார் ஐயரவர்

கள். வந்தவர்களிடம் நீங்கள் ஏதாவது ஒர் அடியை

சொல்லுங்கள்; இவர் உடனே அதை வைத்து ஒரு பாட்டுப் பாடிவிடு வார்’ ‘ என்பார். -

ஐயரவர்களது வேண்டுகோளின்பேரில் அவர்களும் ஏதாவது ஒர் அடியைச் சொல்வார்கள். இவர் அதை

வைத்து ஒரு பாட்டு இயற்றிவிடுவார். அவர் க ள்

பெரிதும் வியப்படைவார்கள்.

இப்படி மகாவித்துவான் ராகவையங்கார், வேங்கடந்

‘சாமி நாட்டார், டி. ஸி. ஸ்ரீநிவாசையங்கார் முதலிய தமிழறிஞர்களிடம் எல்லாம் இவரை ஆசுகவியாக அறிமுகப்படுத்தினார் ஐயரவர்கள். -

ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரை அறியாத வர்கள் யாரும் இருக்க முடியாது. கவியின் ஆழ்ந்த உள்ளம் கண்டு படித்தின்புறத் தமிழ் ஒன்றின் மூலமாகத்

தான் முடியும்’ என்பதை அநுபவ வாயிலாகப் பலருக்கும்

உணர்த்தியவர் அவர். -

ரசிகமணி டி.கே.சி., திருச்சியில் நாலாவது ஃபாரம்

படித்துக்கொண்டிருந்தபோது ஐயரவர்கள் திருச்சிக்கு

ஒரு முறை போனார். திருச்சி எஸ்.பி. ஜி. கல்லூரியினர்

ஐயரவர்களைத் தமிழின் அருமைபற்றியும், வளம் பற்றியும் பேச அழைத்திருந்தார்கள். ரசிகமணியும் சிறு பையனாக இருந்ததால், தம் ந ண் ப. ர் க ளு ட ன்

கும்பகோணம் சாமிநாதையரைப் பார்க்க அக்கூட்டத். திற்குப் போயிருந்தாராம்.